க்ரைம்

“120 ஆண்களுடன் உடலுறவு” - மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து கணவன் செய்த கொடூரம்.. கேமராவில் பதிவான ஆபாச வீடியோக்கள்!

செல்போன் மூலம் பேசி அவர்களை தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து மனைவியை இரையாக்கி உள்ளார்..

Mahalakshmi Somasundaram

மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் உலகளவில் முன்னுதாரணமாகத் திகழும் ஒரு நாடாகக் கருதப்படுவது ஸ்வீடன். ஆனால் தற்போது ஸ்வீடன் நாட்டில் நடந்துள்ள சம்பவம் உலக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 62 வயதுடைய நபர் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தனது மனைவியை வற்புறுத்தி 120 ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி ஸ்வீடன் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த நபர் தனது மனைவியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி இருக்கிறார். தனது நண்பர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள தெரிந்த ஆண்களிடம் செல்போன் மூலம் பேசி அவர்களை தனது பண்ணை வீட்டுக்கு வரவழைத்து மனைவியை இரையாக்கி உள்ளார்.

பலமுறை இவ்வாறு செய்வதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்த நிலையில் அவருக்கு மயக்க மாத்திரைகளை கொடுத்து பாலியல் குற்றத்தில் ஈடுபடுத்தி இருக்கிறார். மேலும் இதனை வெளியில் தெரிவித்தால் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாகவும், வெட்டிவிடுவேன் எனவும் மிரட்டினார் என வழக்கறிஞர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இது போன்ற குற்ற செயலில் ஈடுபடுவதற்கு மனைவிக்கு நண்பர்களும், உறவினர்களும் இல்லாதது சாதகமாக அமைந்திருந்தது என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த நபர் தனது மனைவி தப்பித்து செல்லாமல் இருக்க பண்ணை வீட்டில் சிசிடிவி கேமராக்களை வைத்து கண்காணித்ததாகவும் அந்த கேமராக்களை பயன்படுத்தி சில நேரங்களில் உடலுறவு வைத்துக் கொள்வதை வீடியோ எடுத்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து 15 நாட்களாக விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் அந்த 62 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 120 ஆண்களில் 28 நபர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.