

பல்லடம் மாதப்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் கொலை செய்துவிட்டு மதுரையில் சரணடைந்த கொலையாளி. வாக்குமூலம் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருள்புரம் பகுதியில் வசித்து வருபவர் விக்னேஷ் தர்மா. இவருக்கும் ராஜேஸ்வரிக்கும் திருமணமாகி 7 வருடம் ஆகியுளளது. இவர்களுக்கு 5 வயது மகனும் உள்ளன். விக்னேஷ் திருப்பூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது செல்போன் பழுதானதால் மனைவி ராஜேஷ்வரியின் செல்போனை தற்காலிகமா பயன்படுத்தி வந்துள்ளார்.
அப்போது ராஜேஸ்வரியின் செல்போனுக்கு அடிக்கடி வெவ்வேறு எண்களில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதையடுத்து விக்னேஷ் தர்மா ராஜேஸ்வரியின் செல்போனுக்கு வரும் அழைப்புகளை எடுத்து பேசிய போது அது திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் கோபிநாத் என்ற நபர் என தெரியவந்துள்ளது.
அவரை போனிலையே கண்டித்து இனிமேல் அழைக்க வேண்டாம் என சொல்லி வைத்துள்ளார். பின்னர் மனைவியிடம் இது குறித்து கேட்டபோது ராஜேஷ்வரி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து கோவத்திற்கு உள்ளன விக்னேஷ், கடந்த 6 ஆம் தேதி காலை 3 மணியளவில் கோபிநாத்தை பல்லடம் மாதப்பூர் கிருஷ்ணாபுரம் பகுதிக்கு தனியாக வரும் படி அழைத்துள்ளார். கோபிநாத்தும் சொன்ன இடத்திற்கு வந்து சந்தித்துள்ளார். அங்கு விக்னேஷ் தர்மா, “தனது மனைவியிடம் எவ்வித தொடர்பும் இருக்கக் கூடாது” என எச்சரித்துள்ளார். பதிலுக்கு கோபிநாத் அவரிடம் சண்டையிட்டு தகராறு செய்துள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த இருவரும் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விக்னேஷ் தர்மா அருகில் இருந்த கயிற்றை எடுத்து கோபிநாத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
கோபிநாத்தின் மனைவியான சத்யபாமா, கணவனின் கொலை குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் கடந்த 6 தேதி புகார் கொடுத்துள்ளர். கடந்த 8 ஆம் தேதி வழக்குபதிவு செய்த போலீசார் கோபிநாத்தை தேடி வந்தனர். மேலும் கோபிநாத்தை கொலை செய்து விட்டு தப்பியோடிய விக்னேஷ் தர்மா மதுரையில் உள்ள வழக்கறிஞர் மூலம் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய விக்னேஷ் தர்மா கொடுத்த தகவலின் பேரில் பல்லடம், பொங்கலூர் , அவிநாசிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோபிநாத்தின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.