கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிஒன்று இயங்கி வருகிறது. அங்கு 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக 24 வயதான ஆங்கில ஆசிரியரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். வருகின்ற சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த 2ம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு செல்ல விடாமல் அதே பள்ளியில் பணியாற்றி வந்த ஆங்கில ஆசிரியர் அகஸ்டின் (24) என்பவர் பாலியல் தொல்லை அளித்தக்கதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் ஆசிரியரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பலிகொடடித்ற்கு வந்தனர். மேலும் மக்கள் பள்ளியை முற்றுகையிட்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் குற்றச்சாட்டப்பட்ட ஆசிரியரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் அகஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பள்ளி ஆசிரியர், 7 வயது குழந்தையிடம் தவறாக நடந்து கொண்டது பெற்றோரிடமும் கிராம மக்களிடையேயும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 1098 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்