Mother Killed by Son 
க்ரைம்

“உயிருக்காக கதறிய தாய்.." ஆடைகளை உருவி நிர்வாணமாக தாக்குதல் நடத்திய மகன்! CCTV-யால் அம்பலமான மிருகத்தனமான செயல்

ஜேக்கப் தனது தாயை எதிர்கொண்டு, அவரது உடலில் இருந்த துண்டினை உருவி கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

Vinvizhi Leninton

மகன் ஒருவர் தனது வீட்டின் வாசலில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, தனது தாயான கிறிஸ்டின் ஹாமில்டனை ஆடையின்றி நிர்வணமாக அடித்து கோழி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பென்சில்வேனியா பகுதியில் 29 வயது ஜேக்கப் கோர்பர், தொலைக்காட்சி செய்திக்குழுவினர் முன்னிலையில் பரபரப்பான முறையில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இல்லத்தில் இருந்த பாதுகாப்பு கேமராப் பதிவுகள், ஜேக்கப் அவரது தாய் மீது நடத்திய கொடூரமான தாக்குதலைப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பென்சில்வேனியா மாநிலக் காவல் படை வீரர் ஒருவர் கூறுகையில், "அந்த தாய் எவ்வளவு கொடுமைகளை அனுபவித்திருப்பார். என்று நினைக்கவே முடியவில்லை" என்று கூறியதாக கூறப்படுகிறது. காலை சுமார் 9 மணியளவில் தாக்குதல் நடந்தபோது ஹாமில்டன் (தாய்) அவரது உடலில் ஒரு துண்டை மட்டுமே அணிந்திருந்தார் என்பதை காணொளிக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. ஜேக்கப் தனது தாயின் முன்னாள் சென்று , அவரது உடலில் இருந்த துண்டினை உருவி கொடூரமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்.

மேலும், நீண்ட நேரம் நீடித்த இந்தச் சம்பவத்தின்போது, ​​அவரது தாய் தன் உயிருக்காக மன்றாடியுள்ளார். ஆனால் ஜேக்கப் ஒருபோதும் கருணை காட்டவில்லை, என்று காவல்துறை அதிகாரி கூறியதாக கூறப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தான் தாயின் மீது ஜேக்கப் தாக்குதலை நடத்தியுள்ளார்.

ஒரு மணி நேரம் நீடித்ததாகக் கூறப்படும் அந்தத் தாக்குதல் முழுவதும், அண்டை வீட்டாரோ அல்லது ஹாமில்டனின் மகளோ எந்த உதவிக்கான கூக்குரலையும் கேட்கவில்லை என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குப் பிறகு, கோர்பர் தனது ஆடைகளை மாற்றிவிட்டு, அருகிலுள்ள ஒரு வயலில் உறங்குவதற்காக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் காவல்துறையால் கூறப்படுகிறது.

பின்னர் தாக்குதலில் தாய் உயிரிழந்ததையடுத்து அவரது உடலை ஜேக்கப்பின் சகோதரிதான் கண்டுபிடித்துள்ளார் என்று காவல்துறை அதிகாரிகளால் கூறப்படுகிறது. 29 வயதான ஜேக்கப், கொடூரமான தாக்குதல் நடந்த அதே நாளில், மாலை சுமார் 5 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். உயிரிழப்பு சம்பவம் நடந்த அதே சாலையில் அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும், அந்தக் கொடூரமான தாக்குதல் தொடர்பாக, ஜேக்கப் மீது கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர் தற்போது வெஸ்ட்மோர்லேண்ட் கவுண்டி சிறையில் பிணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும், செப்டம்பர் 14 அன்று அவருக்கு ஒரு முதற்கட்ட விசாரணை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தற்போது வரை இவர் தனது தாயை நிர்வாணமாக அடித்ததற்கான காரணம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்