MANIKANDAN AND SIVASHANKAR 
க்ரைம்

இதுக்கெல்லாமா கொல்லுவீங்க? துபாயிலிருந்து வந்தவருக்கு காத்திருந்த சோகம்.. ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் உயிரிழந்த சகோதரர்கள்!

பாதுகாக்க சுப்பு காவலாளியை நியமித்த நிலையில் தோட்டத்தில் கோழி திருடியபோது மணிகண்டன்

Mahalakshmi Somasundaram

சிவகங்கை மாவட்டம் அழகமாநகரி பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் மற்றும் சிவசங்கரன். உடன் பிறந்த சகோதரர்களான இவர்கள் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்து பாட்டியுடன் வசித்து வந்துள்ளனர். மணிகண்டன் கோயம்புத்தூரில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் டைல்ஸ் ஒட்டும் வேலையை செய்து வந்துள்ளார்.

சிவசங்கர் துபாய்க்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அழகமாநகரியில் கோவில் திருவிழா என்பதால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார் சிவசங்கர். ஊர் திருவிழா என்பதாலும் தம்பியை பார்க்கவும் இரண்டு நாட்களுக்கு முன்பு மணிகண்டனும் வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த சுப்பு என்பவர் அழகமாநகரியில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு கோழிகளை வளர்த்து வந்துள்ளார். நிலம் மற்றும் கால்நடைகளை பாதுகாக்க சுப்பு காவலாளியை நியமித்த நிலையில் தோட்டத்தில் கோழி திருடியபோது மணிகண்டன் மற்றும் சிவசங்கர் கைகளவுமாக பிடித்ததாக கூறி தோட்ட காவலாளி மற்றும் ஊர் மக்கள் அவர்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.

ஊர்மக்கள் தாக்கியதில் மணிகண்டன் மற்றும் சிவசங்கர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் மருத்துவர்கள் இது குறித்து போலீசில் தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார். விசாரணை மேற்கொண்டு தோட்டத்தின் காவலாளி உட்பட 13 பேரை கைது செய்து கோழி திருடியதுதான் காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா என விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருவிழாவிற்கு ஊருக்கு வந்த சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்