
திருவண்ணாமலை அருகே பிரம்மா தேசம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைக்கு முன்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சாக்கு மூட்டை ரத்தம் வழிந்தபடி கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவளித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அந்த மூட்டையை திறந்து பார்த்துள்ளனர். அதில் மர்ப நபர் ஒருவரின் உடல் தலையில் கல்லை போட்டு நசுங்கிய நிலையில் இருந்துள்ளது.
அந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து. இறந்தது யார் கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன என்பதை குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். உயிரிழந்தவர் தலை நசுங்கிய நிலையில் இருந்ததால் கையில் இருந்த டாட்டூவை வைத்து உயிரிழந்தவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பதை கண்டறிந்த போலீசார்.
மேலும் பிரம்மதேசம் முழுவதிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போலீசார் இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் மூட்டை எடுத்து வந்து டாஸ்மாக் பகுதியில் வீசி சென்றதை கண்டறிந்து, அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் இது பழிக்கு பழி வாங்கும் விதமாக செய்யப்பட்ட கொலை என தெரியவந்துள்ளது.
இறந்த மணிகண்டனின் சொந்த ஊரான பிரம்மதேசத்தில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் மாதத்தில் இரண்டு கும்பலுக்கு ஏற்பட்ட தகராறில் அதே ஊரை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தலையில் கல்லை போட்டு டாஸ்மாக் பகுதியில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன் மட்டும் எந்த ஆதாரமும் இல்லாததால் தண்டனையில் இருந்து தப்பித்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் இருந்த பாஸ்கரனின் மகனான விஜய் மணிகண்டனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு பலமுறை முயற்சியும் செய்துள்ளார். இதனாலேயே மணிகண்டன் தனது சொந்த ஊரான பிரம்மதேசத்தை விட்டு மனைவியின் ஊரான காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
மணிகண்டன் காஞ்சிபுரம் சென்ற நிலையிலும் விடாமல் அவரை கொலை செய்ய சரியான நேரம் பார்த்து கண்காணித்துக் கொண்டிருந்துள்ளார் விஜய். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து இறைச்சி வாங்க தனியாக வந்த மணிகண்டன் விஜய் அவரது நண்பர்களின் உதவியுடன் கடத்தி தலையில் கல்லை போட்டும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்துவிட்டு, தனது தந்தை கொன்ற இடத்திலேயே மணிகண்டனின் உடலை சாக்கு மூட்டையில் போட்டு வீசி சென்றுள்ளார்.
எட்டு வருடங்களுக்கு முன்பு செய்த கொலைக்காக ஒருவர் பழிவாங்க பட்டிருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய குற்றவாளியா விஜய் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மூன்று நண்பர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்