Odisha gang rape case 
க்ரைம்

"எங்களை விட்டுருங்க.." நடுரோட்டில் கெஞ்சிய ஜோடிகள்! 6 பேரால் கொடூரமாக சீரழிக்கப்பட்ட இளம்பெண் - ஆண் நண்பரை தாக்கி வெறிச்செயல்

ஆணைக் கடுமையாகத் தாக்கிய பின்னர், அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Vinvizhi Leninton

ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில், செவ்வாய்க்கிழமை இரவு தனது நண்பருடன் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட கும்பலால் கார் மறுக்கப்பட்டு அதில் பயணித்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது ஆண் நண்பரும் புவனேஸ்வரிலிருந்து கேந்திரபாடாவுக்குப் பயணம் செய்துகொண்டிருந்தபோது, ​​கட்டாக்-சந்த்பலி சாலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், செவ்வாய் மற்றும் புதன்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது ஆண் நண்பரும் பயணித்த காரைக் குற்றவாளிகள் வழிமறித்து, இருவரையும் வாகனத்தை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தியுள்ளனர். மேலும், அந்த ஆணைக் கடுமையாகத் தாக்கிய பின்னர், அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன் பின்னர், அந்தக் குழு அந்த இடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளது. 30 வயதுகளில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது ஆண் நண்பரும் புவனேஸ்வரில் உள்ள ஒரு நிறுவனத்தில் சக ஊழியர்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. கட்டாக் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் (SP) வினித் அகர்வால் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர்கள் புதன்கிழமை அதிகாலையில் காவல்துறையை அணுகியதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மேலும், குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்வதற்காகப் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று நம்புவதாக,” என அகர்வால் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆதாரங்களைச் சேகரிப்பதற்காக, பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது நண்பரும் பயணித்த வாகனத்தையும் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தடயப் பொருட்களைச் சேகரிப்பதற்காக, குற்ற நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாலியல் வன்புணர்விற்கு ஆளான பெண்ணின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், அவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் அளிக்கப்பட்டு வருகிறது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்