man beats his mother in law  
க்ரைம்

“கஞ்சா போதையில் மாமியாரை அறைந்த மருமகன்..!” விவாகரத்தான பின்னரும் மனைவியை விரட்டி..விரட்டி…! - புகார் அளித்தும் கண்டுகொள்ளாத போலீஸ்!!

கடந்த ஒரு வருடமாக தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தி முனீஸ்வரி மற்றும் அவரது தாய் மாரியம்மாள்...

மாலை முரசு செய்தி குழு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தாண்டியபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவருக்கும் முனீஸ்வரி என்பவருக்கும் கடந்த 4 ஆண்களுக்கு முன் திருமணமானது. இந்த நிலையில் இவர்களுக்கு 2 வயதில் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் தினசரி கஞ்சா மற்றும் மதுபோதையில் கலைச்செல்வன் மனைவி முனீஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த முனீஸ்வரி நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்று தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக தன்னுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தி முனீஸ்வரி மற்றும் அவரது தாய் மாரியம்மாள் வேலை பார்க்கும் தீப்பெட்டி ஆலைக்குள் புகுந்து தகராறில் ஈடுபட்டு மனைவி மற்றும் மாமியாரை தாக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.  இந்நிலையில் மீண்டும் நேற்று மனைவியை தேடி தீப்பெட்டி ஆலைக்கு புகுந்த கலைச்செல்வனிடம் சமாதானமாக  பேசி முனீஸ்வரி இங்கு இல்லை என அவரது தாய் மாரியம்மாள் தெரிவித்துள்ளார். 

 இதனை ஏற்க மறுத்த அவர் அனைவர் முன்னிலையிலும்  மாரியம்மாளை பளார் என கன்னத்தில் அடித்து கீழே தள்ளிய கலைச்செல்வன், தொடர்ந்து மனைவியை தேடியுள்ளார். பின்னர் தீப்பெட்டி ஆலைக்குள்ளிருந்து பயந்து கைக்குழந்தையுடன் தப்பி ஓடிய மனைவியை விரட்டிப்பிடித்து சரமரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து மனைவி மற்றும் மாமியாரை ஏராளமான பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் தீப்பெட்டி ஆலைக்குள் அத்துமீறி புகுந்து அவர்களை தாக்குவதுடன் அங்குள்ள தீப்பெட்டி தயாரிப்பு உபகரணங்களை சூறையாடிய காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  இவரது தொடர் அத்துமீறல் சம்பவம் குறித்து அவரது மனைவி முனீஸ்வரி அளித்த புகாருக்கு ஏழாயிரம் பண்ணை போலீசார் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.