
தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை காணாத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த தேர்தலின் தனித்துவத்தை உறுதி செய்தவர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தான். இதுவரை அதிமுக - திமுக என்ற இரண்டு பிராந்திய கட்சிகள் மட்டுமே தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த நிலை சற்று மாறியுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்சி துவங்கிய விஜய் திமுக -எதிர்ப்பு என்ற ஒற்றைப்புள்ளியிலிருந்து தனது அரசியலை முன்னெடுத்தார். அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது பல கட்ட விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் அனைத்தையும் கடந்து 2 மாநில மாநாடுகளை நடத்தி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களாக மக்களையும் சந்தித்து வருகிறார் விஜய்.
ஆனால் அவர் கிடைக்கும் இடங்களில் எல்லாம் பேசுவது வெறும் திமுக எதிர்ப்புதான், அவர் பாஜக, அதிமுக -ஆகிய கட்சிகளை விமர்சித்தாலும் திமுக அளவிற்கு அவர் யாரையும் சாடியதில்லை. முன்னதாக நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில், மன்னராட்சி, ஊழலில் திளைத்த கட்சி என காத்திரமாக விமர்சித்திருந்தார்.
அதற்கு அடுத்து வந்த, மதுரை மாநாட்டில் “stalin Uncle” கேக்குதா? என பேசி மு.க.ஸ்டாலின் உருவாக்கி வைத்திருந்த “அப்பா” இமேஜை உடைத்துவிட்டிருந்தார். இப்படி தொடர்ச்சியாக விஜய் கால் வைக்கும் இடங்களில் எல்லாம் திமுக -விற்கு எதிரான விமர்சனங்களையே முன்னெடுத்து வருகிறார்.
அதிலும் கடந்த நாகப்பட்டினம் - திருவாரூர் பரப்புரையின்போது அவர் பேசிய கருத்துக்கள் மேலும் வைரலாகின. விஜய்யின் இந்த அதிரடிப் பேச்சு, தமிழக அரசியலில் சில முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான் விஜய் - இன்று நாமக்கல்லில் தனது பிரச்சாரத்தை நடத்த உள்ளார். நேற்றுதான் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் நாமக்கல் மாவட்ட காவல் ஆணையரிடம் அனுமதி பெற்று வந்தார்,
நாமக்கல்லை தொடர்ந்து கரூரிலும் பரப்புரை நடத்த அனுமதி கிடைத்துள்ளது . கரூரில் பரப்புரை நடத்துவதில் சிக்கல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்யும் இடம் அனுமதி பெறுவதில் சிக்கல் உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரே மாதிரியான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.தவெக -விற்கு மட்டும் அதிக நிபந்தனைகள் விதிக்கப்படுவது ஏன்!?கரூரில் நடந்த முதல்வர் பங்கேற்ற திமுக நிகழ்ச்சியில் பொதுமக்கள், ஊடகங்கள் முன்னிலையில் வெளிப்படையாக விதிமீறல்கள் நடைபெற்றன.
தமிழக வரலாற்றில் தவெக நிர்வாகிகள் மீது தான் பேனர் வைத்தற்காக பிணையில் வெளியில் வரமுடியாதப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பேனர் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நீதிபதியே வியந்து போனார். வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக திருச்சியை தொடர்ந்து திருவாரூரில் ஒரு வாரத்திற்கு பின் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
சனிக்கிழமை மட்டும் வெளியே வரக்கூடிய ஆள் நான் இல்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன விமர்சனம் குறித்த கேள்விக்கு, முதலில் அவர் தூங்கி எந்தரிக்கட்டும், நேரத்திற்கு வரட்டும், அவருடைய துறை பெயரை தெரியாமல் இருக்கின்றார். 3 ஆண்டுகளாக துறையின் பெயரை தெரியாமல் இருக்கின்றார் என பேசினார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.