Admin
க்ரைம்

“நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா” - காரணமே இல்லாமல் அடித்த காவலர்.. சுற்றி வளைத்து பிரச்சனை செய்த இளைஞர்கள்!

சுற்றி வளைத்து தொடர்ந்து மிரட்டினர். ஒரு கட்டத்தில் விட்டால் போதும் என அந்த காவலர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி..

Mahalakshmi Somasundaram

தாம்பரம் அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு டாஸ்மாக் பாரில் இளைஞர்கள் வழக்கம் போல மது அருந்தி கொண்டிருந்தபோது பாரில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது பார் உரிமையாளர் கார்த்திகேயன் எங்கு இந்த தகர பெரியதாகி விடுமோ என போலீசாரை தொலைபேசியில் அழைத்து தகவலை தெரிவித்துள்ளார்.

தகவலின் பெயரில் அங்கு சென்ற காவலர் கார்த்திகேயன் என்ன நடந்தது என்பதை விசாரிக்காமல் பார் உரிமையாளர்க்கு ஆதரவாக செயல்பட்ட தோடு அங்கு மது அருந்தி இருந்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்ற நபரை காரணமே இல்லாமல் கன்னத்தில் அறைந்ததாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே அடிவாங்கிய நபருக்கு கன்னத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கும் நிலையில் காவலர் அனைவரும் முன்னிலையில் அடித்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த நபர் மற்றும் அவருடன் இருந்த இளைஞர்கள் ஒன்று கூடி காவலரை சிறை பிடித்ததோடு சுற்றி வளைத்து தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர் . ஒரு கட்டத்தில் இளைஞர்கள் காவலர் கையை பிடித்து, “நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா, இவனை அடிக்க உங்களுக்கு யார் வேலை கொடுத்தது, இது தான் உங்கள் வேலையா? இங்கிருந்து எப்படி செல்வீர்கள் என பார்க்கிறோம்” என்று சவால் விட்டு காவலரை அடிக்க முயற்சித்துள்ளனர்.

இதனால் காவலர் அங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடலாம் என இரு சக்கர வாகனத்தை எடுக்க முயன்ற போது வாகனத்தை எடுக்க விடாமல் சுற்றி வளைத்து தொடர்ந்து மிரட்டினர். ஒரு கட்டத்தில் விட்டால் போதும் என அந்த காவலர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற போது இளைஞர்கள் ஒன்று கூடி பின்னாலே சென்று காவலரை துரத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இளைஞர்கள் காவலரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.