Vilathikulam rape case Vilathikulam rape case
க்ரைம்

விளாத்திகுளம் மனைவி வழக்கில் வெளியானது தீர்ப்பு! குற்றவாளிக்கு 'இரட்டை தூக்கு தண்டனை' விதித்த நீதிபதி

வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விடுத்துள்ளார் நீதிபதி.

Vinvizhi Leninton

நாட்டையே உலுக்கிய விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விசாரணை நிறைவடைந்த நிலையில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விடுத்துள்ளார் நீதிபதி.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கடந்த (மார்ச் 11) ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி சுப்புராஜ். இவரது மனைவி காளீஸ்வரி இந்த தம்பதிக்கு 17 வயது மகள் இருந்த நிலையில் அவர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் கடந்த (மார்ச் 10) ஆம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதைக்காக வீட்டிலிருந்து வெளியே சென்றதாக சொல்லப்படுகிறது. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். எனவே பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவியை தேடிய நிலையில் அவர் எங்கு தேடியும் கிடைக்காமல் இருந்திருக்கிறார். எனவே போலீசாரிடம் புகாரளித்து தேடி வந்த நிலையில் மறுநாள் காலை காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டநிலையில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்நிலையில், நீதிபதியின் உத்தரவின் படி தர்ம முனீஸ்வரன் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், போக்ஸோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை காவல் துறையால் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், குழந்தைகளை பாதுகாக்கும் போக்ஸோ சட்டம் 32/1 கீழ் இந்த வழக்கினை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சார்ந்த கழுங்குவிளை பகுதியை சேர்ந்த எல்லம்மாள் என்ற சிறப்பு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், பள்ளி மாணவியின் பாலியல் பலாத்கார வழக்கு கடந்த 5 தேதி விசாரணைக்கு வந்தது. மேலும் பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரனை போலீசார் போக்ஸோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் படுத்தினர். மேலும் 71 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை 20ம் தேதி நிறைவடைந்த நிலையில் தற்போது இன்று போக்ஸோ நீதிமன்றத்தில் தர்ம முனீஸ்வரனை குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் தண்டனை விவரங்கள் இன்று மதியம் 2.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நீதிபதி ப்ரீத்தா இரட்டை தூக்கு தண்டனை விதித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.