SI Rajagopal SI Rajagopal
க்ரைம்

புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய SI! வசமாக ஆதாரத்தோடு சிக்கிய அதிர்ச்சி - "போலீஸ் செய்யும் வேலையா இது?"

புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பிய புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Vinvizhi Leninton

பழனியில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்த ராஜகோபால் என்பவர், காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு அலைபேசியில் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) அனுப்பிய புகாரின் பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

​திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக (SI) பணியாற்றி வந்தவர் ராஜகோபால். இவரிடம் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்சனை குறித்துப் புகார் அளிப்பதற்காகக் காவல் நிலையம் வந்துள்ளார். ​அப்போது அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்றுள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால், அந்த பெண் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல், அலைபேசியில் குறுஞ்செய்தி (SMS) மூலமாகப் பெண்ணிற்குத் தொடர்ந்து ஆபாசமான முறையில் மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார். மேலும் மெசேஜ்கள் மூலம் அந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், காவல் அதிகாரி ராஜகோபாலின் அநாகரிகச் செயல் குறித்துத் தகுந்த ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்துள்ளார்.

​இப்புகார் குறித்து உயர் காவல் அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலிடம் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அலைபேசி வழியாக ஆபாசமாக மெசேஜ் அனுப்பி அத்துமீறியது உறுதி செய்யப்பட்டது. மேலும், ​பாதுகாப்பு தேடி வரும் பொதுமக்களிடம், அதுவும் பெண்ணிடம் காவல் அதிகாரியே இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொண்டது காவல் துறை வட்டாரத்தில் பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்ந்து, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபாலை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் டி.ஐ.ஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.