murder in pune 
க்ரைம்

ஸ்கூல் போற வயசுல உங்களுக்கு என்னப்பா முன்பகை..?நடுரோட்டில் சிறுவனை கத்தியால் குத்திக்கொன்ற கும்பல்!! புனேவில் பயங்கரம்!!

தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒரு சுவர். அப்போது அவரை ...

மாலை முரசு செய்தி குழு

2026 எத்தனையோ வகைகளில் வளர்ச்சி பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் மனித உளவியல் வன்மம் குறைந்தத ஒன்றாய், மனிதத்தை நிலைநாட்டக்கூடிய ஒன்றாக மாறிவிட்டதா என்றால் அது பெரும் கேள்விக்குறிதான். அதிலும் குறிப்பாக இளைய சமூகத்தினர், மிகவும் ‘impulsive’ -ஆக இயங்கிவருகின்றனர், மேலும் அவர்களின் எல்லா உணர்வுகளும் ‘exstreem’ -ஆனதுதான். 

கொஞ்சம் பொறுமையும், யோசித்து செயல்படும் தன்மையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. ஒன்று அவர்கள் விரும்பியபடி வாழ்க்கை போகவில்லை என அறிந்தால் தற்கொலை செய்துகொள்வது, இல்லையெனில் ஆத்திரத்தில் அடுத்திருக்கும் மனிதரை காயப்படுத்துவது. வளரும் இளம் பருவத்தினரிடையே காணும் இந்த போக்கு மிக மிக மோசமானது. அப்படி ஒரு மோசமான சம்பவம்தான் புனேவில் அரங்கேறியுள்ளது. சிறுவர்களுக்கு இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக நடுரோட்டில் ஒரு சிறுவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நகரின் மையப்பகுதியில் உள்ள பாஜிராவ் சாலையில் அமைந்துள்ள மஹாராணா பிரதாப் கார்டன் அருகே நடந்த இந்த கொலை சம்பவம்நடந்துள்ளது.

"தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் ஒரு சுவர். அப்போது அவரை வழிமறித்த மூன்று பேர், அவரை மடக்கிப்பிடித்து கூர்மையான ஆயுதங்களால் குத்திக்கொன்றுள்ளனர்.  இந்த கொலையில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு ஆயுதத்தையும் மீட்டுள்ளதாக கடக் காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் அனைவரும் பார்வதி பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், "குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், இறந்தவரும் அவரது நண்பரும் 18 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் யாரும் எந்த கும்பலுடனும் தொடர்புடையவர்கள் அல்ல. இதற்கு முரட்டுத்தனமான முன்பகைதான் காரணம் " என போலீசார் தெரிவித்துள்ளனர்.

18 வயதுக்கு உட்பட சிறுவர்கள் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் மற்றொரு சிறுவனை குத்திக்கொல்லும் உளவியலை என்னவென்று சொல்வது! இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.