தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், 34 வயதான நபர் ஒருவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
21 வயதான யூகே ஷிரீஷா என்ற பெண், துக்குகுடாவில் உள்ள 'பிரைம் கேர்' மருத்துவமனையில் சுமார் ஏழு மாதங்களாக செவிலியராகப் பணிபுரிந்து வந்துள்ளார். அவர் மற்ற செவிலியர் ஊழியர்களுடன் மருத்துவமனைக்கு அருகில் வழங்கப்பட்ட தங்குமிடத்தில் தங்கியிருந்துள்ளார்.
ஷிரீஷா வெள்ளிக்கிழமை (28/08/2026) இரவு சுமார் 10 மணியளவில் தனது பணிகளை முடித்துவிட்டு அறைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. மறுநாள் சக ஊழியர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஒரு சக ஊழியர் ஷிரீஷா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, அறைக்குள் அவர் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். மேலும், ஷிரீஷாவின் முகத்தில் காயங்கள் இருந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை ஆரம்பத்தில் இந்த நிகழ்வை ஒரு கொலை வழக்காகவே பதிவு செய்து, இந்த மரணத்தை குறித்து 5 தனிப்படையை அமைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், இந்த வழக்கில் ஷிரீஷாவின் வீட்டிற்கு அருகில் இருந்த 4 பேர் மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்துள்ளது. அவரைகளை அழைத்து விசாரித்ததோடு, அவர்களது செல்போனையும் வாங்கி போலீசார் விசாரித்துள்ளனர். பின்னர் விசாரணைக்கு பிறகு சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில், ஷிரீஷா தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் மெக்கானிக்கல் ஷாப்-பில் வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த எம்.டி. சனாவுல்லா கான் என்பவரே சந்தேக நபர் என போலீசார் அடையாளம் கண்டு அவரைக் கைது செய்துள்ளனர்.
ஷிரீஷாவை வெகு நாட்களாகவே சனாவுல்லா கண்காணித்து வந்துள்ளார். மேலும், குற்றம் சட்டப்பட்டவரின் தொலைபேசியை கைபாடிய போலீசார் அதில் 3000-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் கண்டுள்ளனர். மேலும், அவர் அப்பகுதியில் உள்ள சில பெண்களை ஆட்சபனைக்குரிய வகையில் வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளார். சனாவுல்லா ஆபாச வீடியோகளுக்கு அடிமையானவராகவும் இருந்துள்ளார் என்று காவல்துறையினர் விசாரணையில் கூறப்படுகிறது. மேலும், சம்பவத்தன்று, ஷிரீஷாவோடு அறையை பகிர்ந்து தங்கியிருந்த பெண் ஓணம் பண்டிகை காரணமாக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்தி, அந்த அறையின் ஜன்னல் வழியாக அறைக்குள் நுழைந்து ஷிரீஷாவிடம் தவறாக நடந்துள்ளார்.
மேலும், ஷிரீஷாவை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அவரது மூக்கு மற்றும் கழுத்தினை அழுத்தியதால் ஷிரீஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அவரது எலும்புகள் உடைந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், தனது மெக்கானிக் ஷாப் முதலாளியிடம் அவரசரமாக தான் வெளியே செல்லவேண்டும் என்றும் பெட்ரோலுக்கு பணம் தருமாறும் கேட்டதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. சம்பவம் நடந்து 30 மணிநேரத்திற்குள் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்