தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம், ஷாபாத் மண்டல் பகுதியை சேர்ந்தவர் 35 வயதுடைய ராஜ் குமார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பார்வதி சரிதா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜ்குமார் தைவாலகுடா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து கடந்த மே 16ஆம் தேதி, அச்சிறுமி தன் தாயுடன் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், தனக்கு எதிராகப் போக்சோ வழக்குப் பதிவு செய்த குடும்பத்தின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். எனவே . சமீபத்தில் ஜாமீனில் வெளியில் வந்த ராஜ்குமார், இன்று அதிகாலையில் புகார் அளித்த சிறுமியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டில் இருந்த சிறுமியின் பாட்டி ருக்கம்மா (65), தாய் சித்யால லட்சுமி (45) ஆகியோரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். பின்னர், மைனர் சிறுமியை அருகில் இருந்த வயல்வெளிக்கு இழுத்துச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து அவரையும் கொடூரமாகக் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது.
அதன்பிறகு தன் வீட்டிற்குச் சென்ற ராஜ்குமார், தன் மனைவி பார்வதி சரிதா (30), மற்றும் அவரது குழந்தைகளான பரீக்ஷித் (3), தைவிக்ஷித் (2) ஆகியோரையும் வெட்டிக் கொலை செய்திருக்கிறார். இந்த அடுத்தடுத்த கொலைகளுக்குப் பிறகு ராஜ்குமார் தன் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, "நான் ஆறு பேரைக் கொலை செய்துவிட்டேன். ஒரு இடத்தில் மூன்று பேரையும், மற்றொரு இடத்தில் மூன்று பேரையும் கொன்றேன். நானும் இப்போது இறக்கப் போகிறேன்," என்று கூறியுள்ளான்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவனது பெற்றோர் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்குப் போலீசார் வருவதற்குள் ராஜ்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். போலீசார் எனவே ஆறு பேரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ராஜ்குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். போக்சோ வழக்கில் சிறை சென்ற குற்றவாளி ஜாமீனில் வந்து 6 பேரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.