பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் நாடு முழுவதும் மட்டுமல்ல வீட்டில் தொடங்கி உலகம் முழுவதுமே நடந்து வருகிறது. வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை என பல பல வகைகளில் பெண்கள் தொந்தரவினையும், சித்திரவதைகளையும் இன்று வரை, இந்த கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்த நிமிடம் வரை அது நடந்து கொண்டேதான் இருக்கிறது.
ஆனால், இதன் உச்சக்கட்டமாக ஆப்பிரிக்க நாட்டில் நடக்கும் ஒரு கொடூர சடங்கினை பற்றித்தான் இங்கு நாம் பார்க்கவிருக்கிறோம். காம்பியாவில் பரவலாகக் காணப்படும் இந்த நடைமுறையில், சிறுமிகளை வலுக்கட்டாயமாகக் கட்டிவைத்து, அவர்களின் பிறப்புறுப்பின் பகுதிகளை வெட்டுவதும், சில சமயங்களில் அந்தக் காயத்தைத் தைத்து மூடுவது போன்ற கொடூர செயல் செய்யப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை மதத் தலைவர்களும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும், 2024-ம் ஆண்டில் காம்பியாவின் பெண் பிறப்புறுப்பு சிதைப்புத் தடையை ரத்து செய்ய நாடாளுமன்றத்தை வலியுறுத்தத் தவறிவிட்டனர். மேலும், இந்தத் தடை கலாச்சார மற்றும் மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என்று வாதிட்டு, அவர்கள் தங்கள் போராட்டத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு சென்ற சம்பவமும் நடந்துள்ளது.
23 கோடிக்கும் அதிகமான சிறுமிகளும் பெண்களும் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களில், பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 63 சதவீதம் பேர் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள். காம்பியாவில், 2020-ம் ஆண்டில் 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசியினர் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர் 5 வயதுக்கு முன்பே சிதைக்கப்பட்டுள்ளனர். மேலும், பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) என்பது பெண்களின் வெளிப்புற பிறப்புறுப்புகளைப் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அகற்றுவது அல்லது பிறப்புறுப்புகளுக்கு பிற காயங்களை ஏற்படுத்துவதாகும். இது கடுமையான இரத்தப்போக்கு, தொற்று, மலட்டுத்தன்மை, பிரசவத்தில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் மரணம் உள்ளிட்ட பேரழிவுகரமான உடல்நல விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று பல பெண்கள் சார்பிலும், ஆர்வலர்கள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டை, மதப் பாரம்பரியவாதிகளும் சில தேசிய சட்டமன்ற உறுப்பினர்களும் கொண்டு வந்துள்ளனர். பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) என்பது ஆழமாக வேரூன்றிய ஒரு கலாச்சார மற்றும் மதப் பழக்கம் என்றும், அதைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு அது அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர். மேலும், இந்த நடைமுறையின் நன்மையாக பெண்களின் பாலியல் ஆசையைக் குறைப்பதே என்றும், "இது ஆண்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்கலாம்" என்றும் மத தலைவர்களால் கூறப்படுகிறது.
தற்போது, இந்த தடையை நீக்க கோரிய வழக்கில் "இந்தத் தீங்கு விளைவிக்கும் பழக்கத்தை ஒழிப்பதில் அரசாங்கம் தனது உறுதியில் உறுதியாக நிற்கிறது" என்று அரசால் கூறப்பட்டுள்ளது. ருவர் வாக்களிக்காமல் இருந்த நிலையில், 35க்கு 17 என்ற வாக்கு வித்தியாசத்தில் சட்டமியற்றுபவர்கள் அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். பெண்களுக்கு வானும் எல்லை இல்லை என்று பேசிவரும் இந்த AI யுக நூற்றாண்டில் இதுபோன்ற மனதை உலுக்கும் கலாச்சாரம், நம்பிக்கை என்ற பெயரில் பெண்களை சுற்றி நடக்கும் அவலங்களும் நடக்கிறது. ஆனாலும், இதனை குரல்கொடுத்து அவர்களுக்கான உரிமையை மீட்டு மீண்டும் பெண்களிடம் கொடுக்கப்படும் என்பதும் நடந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்