தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் அதே பகுதியில் தனியார் வாகன ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் ஊத்துமலையை சேர்ந்த கருத்ததுரைச்சி என்பவரது மகளான காளீஸ்வரிக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பாலசுப்ரமணியனுக்கு குடிப்பழக்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது, எனவே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலயில் காளீஸ்வரி தனது குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது ஊரான ஊத்துமலையில் கோவில் திருவிழா நடைபெற்ற நிலையில் அந்த திருவிழாவில் கலந்து கொள்ள அவரது மனவியின் வீட்டிற்கு சென்ற பாலசுப்பிரமணியன் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு அன்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளை தன்னுடன் அனுப்புமாறு கூறி மாமியாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவர்களை அனுப்பி வைக்க மாமியார் கருத்ததுரைச்சி மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாமியார் மற்றும் மருமகனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு நிலையில் தென்காசிக்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை மீண்டும் பாலசுப்பிரமணியன் ஊத்துமலையில் உள்ள மனைவி வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த மனைவி காளீஸ்வரி மற்றும் மாமியார் கருத்ததுரைச்சியை அரிவாளால் வெட்டியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த கருத்ததுரைச்சியை மீட்ட உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் கருத்ததுரைச்சியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். மேலும் அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த காளீஸ்வரிக்கு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக மருமகன் மாமியாரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் ஊத்துமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்