தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மருதாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 31 வயதுடைய புகழேந்தி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் கீழ் ஆன்லைன் டெலிவரி ஊழியராக பணியாற்றி வந்தார். அப்போது கும்பகோணம் அருகே மருதநல்லூரில் ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் போது சில டெலிவரி சிக்கல்கள் காரணமாக அந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து புகழேந்தி அந்த பெண்ணின் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. ஐவரும் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு அந்த பெண் நீண்ட நாட்களாக பதிலளிக்காமல் தவிர்த்து வந்திருக்கிறார்.
இருப்பினும் தொடர்ந்து புகழேந்தி குறுஞ்செய்தி அனுப்பி வந்த நிலையில் அந்த பெண் இது குறித்து தனது கணவரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான சிபி சக்கரவர்த்தியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த சிபி அவரது மனவியின் போன் மூலம் பெண் மெசேஜ் செய்வது போல “என் கூட பேசணுமா அப்போ இந்த இடத்துக்கு வா” என குறிப்பிட்ட இடத்தின் விவரத்தை அனுப்பி வைத்திருக்கிறார். இதனை பார்த்து அந்த பெண் அனுப்பியதாக நினைத்து கடந்த எட்டாம் தேதி புகழேந்தி மருத நல்லூருக்கு வந்திருக்கிறார்.
அங்கு தந்து நண்பர்களுடன் காத்திருந்த சிபி புகழேந்தியை “என் பொண்டாட்டிக்கு மெசேஜ் அனுப்ப நீ யாரு” எனக்கேட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அவர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த புகழேந்தி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அடுத்த நாள் புகழேந்தியின் உடல்நிலை மோசமாகவே வீட்டில் உள்ளவர்கள் என்ன நடந்தது என புகழேந்தியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது புகழேந்தி நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் உடனடியாக புகழேந்தியை அவர்கள் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சிகிச்சை பலனின்றி புகழேந்தி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த புகழேந்தியின் உறவினர்கள் மருதநல்லூரை சேர்ந்த நான்கு நபர்கள் புகழேந்தியை வரவழைத்து கடுமையாக அடித்து கொலை செய்துவிட்டதாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நாச்சியார் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்ததில், நாச்சியார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியான சிபி சக்கரவர்த்தி மற்றும் அவரது நண்பரான கிருஷ்ணமூர்த்தி, சாமிநாதன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள இரண்டு நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்