இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை கொன்ற கள்ளக் காதலன்.. அதிமுக நிர்வாகியின் மகளுக்கு நடந்த கொடுமை!

இது பற்றி தகவல் அறிந்து பாரதியின் உறவினர்கள் பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக...
இரவு முழுவதும் உல்லாசமாக இருந்துவிட்டு பெண்ணை கொன்ற கள்ளக் காதலன்.. அதிமுக நிர்வாகியின் மகளுக்கு நடந்த கொடுமை!
Published on
Updated on
2 min read

சேலம் ராமகிருஷ்ணா ரோடு பகுதியை சேர்ந்தவர் டெல்லி ஆறுமுகம் இவர் அதிமுகவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். இவரது மகள் 34 வயதுடைய பாரதி பி.இ பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆறுமுகம் உயிரிழந்த நிலையில் சொந்த ஊருக்கு வந்த பாரதி தனது ஐடி வேலையை விட்டு விட்டு அவரது தாயுடன் தங்கி அருகில் இருந்த டியூஷன் சென்டரில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் டியூஷன் சென்டர் மூலமாக தனியார் ஓட்டலில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற போது நாழிக்கல்பட்டி பகுதியை சேர்ந்த உதயசரண் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் சேலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உயரதிகாரியாக(CEO) பணியாற்றி வருகிறார். பாரதி மற்றும் உதயசரண் இருவருக்கு இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. எனவே இருவரும் அடிக்கடி வெளியில் சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். இதற்கிடையில் உதயசரண் மற்றும் பாரதியின் உறவு குறித்து அறிந்த உதயசரணின் மனைவி அவரது கணவரை கண்டித்ததாக சொல்லப்படுகிறது.

வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பாரதியும் உதயசரனும் சினிமாவிற்கு சென்று விட்டு பாரதி தங்கியிருந்த அறையில் உதய்சரணும் தங்கி உள்ளார். அப்போது பாரதி சிகரெட் குடித்ததாகவும் பின்னர் சுருதி நேரத்தில் மயங்கியதாகவும் சொல்லி உதயசரண் அவர் வேலை பார்க்கும் மருத்துவமனையில் பாரதியை சிகிச்சைக்காக அனுதித்துள்ளார். அங்கு பாரதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்து பாரதியின் உறவினர்கள் பாரதி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து தனியார் மருத்துவமனைக்கு வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாரதியின் உடல் பிரேத பரிசோதனை செய்ததில் அவரது மூக்கின் மீது ரத்த காயமும் நெஞ்சு பகுதியில் வீக்கமும் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் உதயசரணிடம் நடத்திய விசாரணையில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு டார்ச்சர் செய்ததால் பாரதியை உதயசரண் அடித்துக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அஸ்தம்பட்டி காவல்துறையினர் உதய்சரனை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com