care taker killed a dog 
க்ரைம்

“விடாமல் குறைத்த நாய்..” ஆத்திரத்தில் பராமரிப்பளார் செய்த கொடூரம்!! சிசிடிவி -ல் பதிவான திடுக்கிடும் காட்சிகள்!!

லிப்ட்-இல் இருந்தபோது, ‘கூஃபி’ அவரைப் பார்த்து குரைத்து உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த...

மாலை முரசு செய்தி குழு

பெங்களூருவில் மெக்சிகன் வகை நாயை அதன் பராமரிப்பாளரே தரையில் மோதி கொன்ற சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில்,  23 வயது எம்பிஏ மாணவி ரஷிகா கே.ஆர் வசித்து வருகிறார். 

அவர், கூப்ஃபி என்ற மெக்சிகன் வகை வளர்ப்பு நாய் ஒன்றை வளர்த்து வந்தார், அதனை பராமரிப்பதற்காக புஷ்பலதா (29) என்ற ஒரு பெண்ணை வேலைக்கு நியமித்துள்ளார். அந்த பெண்ணிற்கு, மாதம் ரூ.22,000 சம்பளத்துடன், தங்குமிடம் மற்றும் உணவு  என அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப் பட்டுள்ளது.

கடந்த 31 -ஆம் தேதி  ராஷிக்கா வீட்டில் இருந்தபோது, கூப்ஃபி -யோடு மற்ற நாய்களையும் வாக்கிங் கூட்டிசென்றுள்ளார். லிப்ட்-இல் இருந்தபோது, ‘கூஃபி’ அவரைப் பார்த்து குரைத்து உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் கூஃபி -யை பார்த்து மிரட்டியுள்ளார். மேலும், தொடர்ந்து அந்த நாய் குறைத்ததில் ஆத்திரமடைந்த அவர், லிஃப்ட் -ன் தரையில் கூப்ஃபி -யின் தலையை தன் ஆத்திரம் தீரும் மட்டும் மோதி உள்ளார். இதனால் அந்த நாய் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

மேலும், வெளியில் வந்து நாய் மயக்கமடைந்து திடீரென உயிரிழந்ததாக கூறி நாடகமாடியுள்ளார். ஆனால் இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, புஷ்பலதா உடனடியாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இன்று நாயின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்படும் என போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

வேலைக்கு சென்றதே நாய்களை பார்த்துக்கொள்ளத்தான், அப்படியிருக்கையில் தன்னை பார்த்து குறைத்தது என்ற குற்றத்திற்காக நாயை அடித்தே கொன்ற பராமரிப்பாளர் புஷ்பலதா -வின் செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.