"பீகாரைப் போலவே..” தமிழகத்தில் இன்று முதல் தொடங்குகிறது SIR ..! என்னென்ன ஆவணங்கள் தேவை!?

"பீகார் பணியைப் போன்றே இரண்டாம் கட்டமும் நடத்தப்படும்" என்று...
voters list
voters list
Published on
Updated on
2 min read

தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை துவங்கியுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் (SIR) இரண்டாம் கட்டத்தை தொடங்கியுள்ளது. இன்று முதல் தமிழகத்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யும் பணி ஆரம்பமாகிறது.

தகுதிவாய்ந்த வாக்காளர்கள் மட்டுமே பட்டியலில் இருப்பதை உறுதிசெய்யவே , வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பு நடத்தப்படுகிறது. இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது நகல் உள்ளீடுகள் நீக்கப்படும். இப்போது மொத்தமாக வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டு உள்ளது. நீங்கள் அதிகாரிகள் தரும் ஆவணங்களை நிரப்பி கொடுத்தால் மட்டுமே உங்கள் வாக்காளர் லிஸ்ட் உறுதி செய்யப்படும். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஊடகங்களுக்கு, அளித்த பேட்டியில், "இந்த முறை பீகாரில் வெற்றிகரமாக நடத்தப்பட்ட முன்னோடித் திட்டத்தின் அடிப்படையில் இருக்கும். பீகார் பணியைப் போன்றே இரண்டாம் கட்டமும் நடத்தப்படும். , வாக்காளர் தரவுகளில் துல்லியத்தை உறுதிசெய்யும் வகையில் பணிகள் நடக்கும்" என கூறியிருந்தார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் துறை அதிகாரிகள் “தமிழகத்தில் 2002 மற்றும் 2005 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி வாக்காளர் கணக்கெடுப்புப் பணி செவ்வாய்க்கிழமை முதல் தொடங்க உள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் இருப்பவர்களின் வீடுகளுக்கு அலுவலர்கள் சென்று, அவர்களின் விவரத்தைக் கேட்டு வாக்காளர் கணக்கெடுப்புப் படிவத்தை வழங்குவார்கள். அந்த வீட்டில் 18 வயது நிரம்பியவர்கள் இருந்தால் அதற்குரிய விண்ணப்பப் படிவம் மற்றும் உறுதிமொழிப் படிவத்தை வழங்குவார்கள். அவற்றை உடனடியாகப் பூர்த்தி செய்து தர வேண்டியது அவசியம் இல்லை. அடுத்த முறை வாக்குச்சாவடி அலுவலர்கள் வரும்போது ஆவணங்களுடன் அவற்றைச் சமர்ப்பித்தால் போதும். இதற்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒரு வீட்டுக்கு மூன்று முறை வருவர். 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதைத் தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.

தேவையான ஆவணங்கள்

தமிழகத்தில் 2002, 2005 வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள் மத்திய, மாநில அரசு ஊழியர் அல்லது ஓய்வூதியதாரராக இருந்தால் அதற்கான அரசு அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய உத்தரவு வைத்திருக்க வேண்டும்.

மத்திய அரசு அல்லது வங்கிகள், மாவட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது சான்றிதழ் அல்லது ஆவணங்கள்; அரசால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

ஆதார்; அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது கல்விச் சான்றிதழ்; மாநில அரசு அதிகாரியால் வழங்கப்பட்ட நிரந்தர இருப்பிடச் சான்றிதழ்; வன உரிமைகள் சான்றிதழ்; ஓபிசி, எஸ்சி, எஸ்டி அல்லது பிற ஜாதிச் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும். 

தேசிய குடிமக்கள் பதிவு; மாநில அல்லது மாவட்ட அதிகாரிகளால் தயாரிக்கப்பட்ட குடும்பப் பதிவு; அரசு சார்பில் நிலம் அல்லது வீடு ஒதுக்கீடுக்கான சான்று உள்ளிட்ட 12 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை கூடுதலாக சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com