விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாதிரி சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஏரிக்கரையின் அருகே கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றிய போலீசார் அந்த உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இறந்தவர் யார் என்ற கோணத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். நீண்ட நாட்கள் புலனாய்வு துறையின் விசாரணைக்கு பிறகு கொலை செய்யப்பட்டவர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள எரதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான 30 ஜோதிமணி என்பது தெரிய வந்தது. மேலும் ஜோதிமணி எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பதை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அதில் ஜோதிமணி அதே பகுதியில் உள்ள உமா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் உமாவின் பெற்றோர்கள் ஜோதிமணி உடனான காதலை கைவிடுமாறு உமாவை வற்புறுத்தியுள்ளார். மேலும் உமாவின் பெற்றோர்கள் உமாவிற்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணம் நடந்த பிறகும் ஜோதிமணி தொடர்ந்து உமாவை தொந்தரவு செய்து வந்துள்ளார். உமா கணவனோடு தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்த நிலையிலும் உமாவை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக தெரிய வருகின்றது .
இதனால் என்ன செய்வதென்று தெரியாத உமா ஜோதிமணி தன்னை பின் தொடர்ந்து தொல்லை செய்வதை குறித்து அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இனி ஜோதிமணி உயிரோடு இருந்தால் உமாவின் வாழ்க்கை நன்றாக அமையாது என யோசித்த உமாவின் பெற்றோர்கள் ஜோதிமணியை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி உமா அவரது பெற்றோர் மாரியப்பன் மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் ஜோதி மணியை டாட்டா ஏசி வாகனத்தில் அழைத்துக் கொண்டு பாதிரி ஏரிக்கரை அருகே வந்து ஜோதி மணியை கயிற்றைக் கொண்டு கழுத்தை இறுக்கி கொலை செய்தது அங்கே வீசி சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில், போலீசார் உமா மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு நேற்று அனுப்பி வைத்தனர். வாலிபர் ஒருவரை கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தில் முன்னாள் காதலி உட்பட மூன்று பேரை ஒரு வருடத்திற்கு பிறகு போலீசார் கைது செய்துள்ள சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.