kumar  
க்ரைம்

“அம்மா வலிக்குது மா” - 7 வயது மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தந்தை.. புகாரளித்த மனைவியை ஜாமீனில் வந்து வெட்டிய கொடூரம்!

இந்த செயலால் ஆத்திரமடைந்த மனைவி மகேஸ்வரி வீட்டின் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று

Mahalakshmi Somasundaram

கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர் 35 வயதான குமார். இவர் திருப்பூரில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் திருப்பூரை சேர்ந்த 33 வயதான மகேஸ்வரி என்பவரை 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் குமார் வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குமார் தனது இளைய மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தை என்ன செய்கிறார் என்பதை கூட தெரிந்துகொள்ள முடியாத அந்த 7 வயது சிறுமி தனது தாயிடம் “அம்மா அப்பா ஏதோ இப்படி செய்வது ரொம்ப வலிக்கிது மா” என கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரி இது குறித்து குமாரிடம் கேட்டுள்ளார். இதற்கு குமார் சரியான பதில் சொல்லாமல் இருந்துள்ளார்.

கணவரின் இந்த செயலால் ஆத்திரமடைந்த மனைவி மகேஸ்வரி வீட்டின் அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு சென்று தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் குமாரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து மகேஸ்வரி தனது நான்கு குழந்தைகளுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்துள்ளார்.

சிறையில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியில் வந்த குமார் குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில் மகேஸ்வரியிடம் சென்று திருந்திவிட்டேன் சேர்ந்து வாழலாம் என அழைத்துள்ளார். மகேஸ்வரி குமார் சொல்வதை காதில் கூட வாங்க தயாராக இல்லாத நிலையில் கணவனை தவிர்த்துள்ளார். தொடர்ந்து குமார் மகேஸ்வரியை அழைத்த நிலையில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி உள்ளது.

இதில் ஆத்திரமடைந்த குமார் வீட்டில் இருந்த அறிவாளை எடுத்து மகேஸ்வரியின் கழுத்தை அறுத்து உள்ளார். இதனால் மகேஸ்வரி சத்தம் போடவே அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மகேஷ்வரியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் மகேஸ்வரி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் குமார் மீண்டும் சென்று போலீசில் சரணடைந்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.