“போட்டோ பார்த்ததுமே பிடிச்சிருச்சு” - பல பெண்களை ஏமாற்றிய இன்ஸ்டா பிரபலம்.. வீடியோ காட்டி பணம் பறித்த மோசடி!

நல்லவர் போல் காட்டி கொண்டு அவர்களிடம் நட்பாக பழகி, உங்களை முதலில்
fakith
fakith
Published on
Updated on
2 min read

கேரள மாநிலம் களக்கூட்டம் பகுதியை சேர்ந்த ஒரு ஐடி ஊழியர், களக்கூட்டம் காவல் நிலையத்தில் தன்னை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக சொல்லி ஏமாற்றி விட்டார் என புகாரளித்துள்ளார். இந்த வழக்கை விசாரிக்க தொடங்கிய காவல்துறைக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்ததுள்ளது.

 விசாரணையில் ஐடி ஊழியரை ஏமாற்றிய நபர் அதே பகுதியை சேர்ந்த ஃபாகித் என்பதும். இவர் மாடலிங் செய்து கொண்டே ஒரு டான்ஸ் ஸ்டுடியோ நடத்தி வருகிறார் என்பதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடலிங் வீடியோக்களையும் டான்ஸ் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டம் வைத்திருப்பதும். அதன் மூலம் பெண்களை ஏமாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.

தனது வீடியோக்களை பார்த்து தனது இன்ஸ்டா ஐடியை பின் தொடர்பவர்களே ஃபாகிதின் டார்கெட்டாக இருந்துள்ளனர். தனது ஐடியை பின்தொடர்பவர்களில் உள்ள பெண்களின் ஐடிக்கு முதலில் “HI என மெசேஜ் செய்வாராம் அதற்கு மீண்டும் மெசேஜ் செய்யும் பெண்களிடம் அவர்கள் மீது மிகுந்த அக்கறை உள்ள நல்லவர் போல் காட்டி கொண்டு அவர்களிடம் நட்பாக பழகி, உங்களை முதலில் போட்டோவில் பார்த்த போதே எனக்கு பிடித்துவிட்டது. என சொல்லி கல்யாணம் செய்துகொள்ளலாம் என ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை காதலிக்க வைத்துள்ளார்.

பின்னர் அப்பெண்களுடன் தனிமையில் இருந்து அதை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த வீடியோக்களை காட்டி பெண்களை மிரட்டுவது பணம் பறிப்பது போன்ற செயல்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார்” குடும்ப மானதிற்கு பயந்து எந்த பெண்களும் இது குறித்து போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இந்நிலையில் ஐடி ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் ஃபாகித்தை கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரது போனை கைப்பற்றியதில் பல பெண்கள் இது போல ஃபாகித்திடம் சிக்கியது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து பேசிய போலீசார் ஃபாகித்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் புகார் அளிக்கும் பெண்களின் விவரங்கள் வெளியிடப்படாமல் பாதுகாக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com