Thiruthani ATM Theft news 
க்ரைம்

‘பயங்கரமான ஆளா இருப்பான் போலையே’ பேப்பரை வைத்து நூதன திருட்டு!! மக்களே உஷார்!!

அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் ரகுநாத் திருத்தணி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வீடியோஆதாரங்களை அடிப்படையாக வைத்து புகார் அளித்துள்ளார்.

Anbarasan

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் சித்தூர் சாலையில் பாரத வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு முன்பு மூன்று ஏடிஎம் மெஷின்கள் மக்கள் பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது.

ஆனால் தொடர்ந்து இந்த ஏடிஎம் இயந்திரம் பழுது ஏற்பட்டுக்கொண்டே இருந்துவந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வங்கியின் மேலாளர் ரகுநாத் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்துள்ளார். ஆனால் அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சியில் ‘சந்தேகப்படும் வகையில் ஏடிஎம் மையத்திற்கு உள்ளே வரும் மர்ம நபர் ஏடிஎம் பணம் எடுக்கும் மிஷினின் அடிப்பகுதியில் பேப்பரை வைத்து திணித்து உள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கி மேலாளர் ரகுநாத் திருத்தணி காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா வீடியோஆதாரங்களை அடிப்படையாக வைத்து புகார் அளித்துள்ளார்.

உடனடியாக திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் வங்கியில் கொடுத்த சிசிடிவி காட்சிகள் ஆகியவற்றின் உதவியுடன் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருச்சானூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 47 என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

திருத்தணி போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கிருஷ்ணமூர்த்தியின் மாஸ்டர் பிளான் தெரியவந்துள்ளது, “வங்கி ஏடிஎம் இயந்திரத்தின் பணம் எடுக்கும் பகுதியில் பேப்பரை வைத்து சென்று விடுவார். பணம் எடுக்க வரும் மீண்டும் வரும்பொழுது அதில் வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை வைத்து ரகசிய குறியீடு பயன்படுத்தி பணம் வரவில்லை என்று சென்று விடும் வாடிக்கையாளர்கள் பணம் அப்படியே ஏடிஎம் மிஷினில் இருந்துள்ளது இதனை திரும்பி வந்து கிருஷ்ணமூர்த்தி எடுத்து சென்று விடுவார்.

ஆந்திராவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி இதற்கு முன்னரே, ஏ.டி .எம் போலி கார்டுகளை பயன்பயன்படுத்தி பணம் எடுப்பது, ஏடிஎம் -ல் பணம் எடுக்க தெரியாதவர்களுக்கு பணம் எடுத்து தருவதுபோல் நடித்து ரகசிய எண்களை தெரிந்துகொள்ளவது, போன்ற குற்றத்தில் ஈடுபட்டவர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏடிஎம் -ல் பணம் இழந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை விவரத்தை வங்கி அதிகாரிகள் தெரியப்படுத்தவில்லை.இந்த வங்கி அருகில் காவல்துறை டிஎஸ்பி அலுவலகம் மற்றும் 50 காவல்துறை காவலர்கள் வீடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்