க்ரைம்

“மாந்தோப்பில் நடந்த பாலியல் வன்கொடுமை” - தனியாக சென்ற நான்காவது படிக்கும் சிறுமி.. புத்தகப் பையோடு தூக்கி சென்ற மர்ம நபர்!

மாந்தோப்பிற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆரம் பக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி நான்காம் வகுப்பு படித்து வருபவர் 10 வயது சிறுமி. ஆந்திர தமிழ் நாடு எல்லையில் உள்ள அரும்பாக்கம் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆந்திராவில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் சிறுமி தனது பாட்டியிடம் தனியாக வளர்ந்து வந்துள்ளார். தினம் தோறும் பள்ளிக்கு தனது பாட்டி வீட்டில் இருந்து நடந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டிற்கு தனியாக நடந்து வந்து கொண்டிருந்த சிறுமியை பின்தொடர்ந்த மர்ம நபர் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து சென்ற சிறுமியை பக்கத்தில் இருந்த மாந்தோப்பிற்கு தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் சிறுமி சத்தம் போடவே சிறுமியை விட்டு விட்டு அந்த மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் சிறுமியின் சத்தம் கேட்டு அப்பகுதிக்கு சென்ற பொதுமக்கள் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசில் புகாரளித்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் தப்பி சென்ற மர்ம நபரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். நான்காவது படிக்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.