Admin
க்ரைம்

“எட்டு வருடங்களாக கள்ளத் தொடர்பில் இருந்த பெண்” - வெளியில் தெரிந்ததால் வெடித்த பிரச்சனை… ஆட்சியர் அலுவலகத்தில் கதறும் வாலிபர்!

அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான இந்து என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வி.சி. ஆர். கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மகேந்திரன் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஏற்கனவே திருமணமான இந்து என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்திருக்கின்றனர்.

இருவரும் தொடர்ந்து இரண்டு குடும்பங்களுக்கு தெரியாமல் எட்டு வருடங்களாக கள்ளத் தொடர்பில் இருந்த நிலையில் இருவரும் எப்போதும் போனில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். நீண்ட வருடங்களாக இதை கவனித்து வந்த மகேந்திரன் மனைவி நந்தினி இது குறித்து கேட்ட போது கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கள்ளக்காதல் குறித்த தகவல் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த நந்தினி இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு போலீசில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த போலீசார் மகேந்திரன் மற்றும் இந்துவை அழைத்து இருவரையும் கண்டித்து அனுப்பியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மகேந்திரன் இந்துவுடன் பேசுவதையும் பழகுவதையும் நிறுத்திக்கொண்டு குடும்பத்துடன் வசித்து வந்திருக்கிறார். ஆனால் தனது கள்ளக்காதலை கைவிட முடியாத இந்து தொடர்ந்து மகேந்திரனுக்கு போன் செய்து தன்னுடன் பேசுமாறு தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நந்தினி இந்துமதி வீட்டிற்கு சென்று கேட்டதற்கு இந்துமதி மற்றும் அவரது கணவர் கார்த்திக், உறவினர்கள் ரஞ்சித், ஆதியம்மாள் ஆகியோர் சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கி காயப்படுத்தியிருக்கின்றனர் . இது குறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் மகேந்திரனின் மகள் பள்ளிக்கு செல்லும் போது சிறுமி என்றும் பார்க்காமல் இந்து மற்றும் அவரது உறவினர்கள் வாகனத்தைக் கொண்டு மோதுவது போல் சென்றும் கீழே தள்ளியும் தாக்கியும் உள்ளனர். மேலும் இந்துமதியின் உறவினர் போலீசாக இருப்பதால் “எங்களை ஒன்றும் செய்ய முடியாது” என்று மிரட்டி வந்திருக்கின்றனர். இந்நிலையில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி அலுவலகத்தில் பாதுகாப்பு வேண்டி மகேந்திரன் அவரது மனைவி நந்தினி மற்றும் மகள் ஆகியோர் மனு அளித்தனர் மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.