க்ரைம்

“உனக்காக தான் என் பொண்டாட்டிய விட்டுட்டு வந்தேன்” - பல ஆண் நண்பர்களுடன் பேசிய கள்ளக்காதலி.. கோபத்தில் காதலன் செய்த வெறிச்செயல்!

கம்பெனியில் வேலை செய்யும் சில ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்ததாக...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த திருநின்றவூர், ராமதாசபுரம், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ஆனந்த கருப்பையா. இவரது மனைவி 36 வயதுடைய மங்கையற்கரசி, இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மங்கையற்கரசி விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு கம்பெனியில் வேலை செய்யும் போது, அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய தங்க மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. இதையறிந்த கணவர் ஆனந்த கருப்பையா, மங்கையற்கரசியை பிரிந்து ஆறு ஆண்டுகளாக ஒரு மகன், மற்றும் மகளுடன் சிவகாசியில் தனியாக வசித்து வருகிறார்.

எனவே மங்கையற்கரசி அவரது மகன் மற்றும் தாய் மீனாட்சி உடன் திருநின்றவூரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள எக்ஸ்போர்ட் கம்பெனியில் மங்கையற்கரசி பணிபுரிந்து குடும்பத்தை கவனித்து வரும் நிலையில் இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட தங்க மாரியப்பன், திருநின்றவூரில் உள்ள மங்கையற்கரசியின் வீட்டில் 'லிவிங் டு கெதர்' பாணியில் ஒன்றாக தங்கி வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் மங்கையற்கரசி தன்னுடன் கம்பெனியில் வேலை செய்யும் சில ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. .

மேலும் வீட்டுக்கு வந்த பிறகும் ஆண் நண்பர்களுடன் மொபைல் போனில் அதிக நேரம் பேசி வந்துள்ளார். இதை தங்க மாரியப்பன் கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல நேற்று இரவு, வேலை முடிந்து மங்கையற்கரசியை அழைத்து வர தங்க மாரியப்பன் சென்ற போது, அவர் ஆண் நண்பர்களுடன் பேசுவது பார்த்து இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த மங்கையற்கரசி, “நான் யாரிடம் பேச வேண்டும் என நீ சொல்ல கூடாது. நீ என்னை கண்ட்ரோல் செய்ய கூடாது. இப்படி செய்தால், நீ இங்கு இருக்க தேவையில்லை. உன் ஊருக்கு சென்று மனைவியுடன் தங்கி கொள்” என கூறியுள்ளார்.

இதை கேட்டு ஆத்திரமடைந்த தங்க மாரியப்பன் பதிலுக்கு 'உனக்காக என் மனைவி குடும்பத்தை விட்டு, என் வருமானத்தை உன்னிடம் கொடுத்தால் நீ இப்படி செய்வியா' என கேட்டுள்ளார். இந்த சம்பவத்தால் ஆத்திரம் மற்றும் மன உளைச்சல் அடைந்த தங்க மாரியப்பன் நேற்று மதியம், மது போதையில் வீட்டுக்கு வந்து, தகராறில் ஈடுபட்டு காய் நறுக்கும் கத்தியில் மங்கையற்கரசியின் கழுத்தை அறுத்து உள்ளார். மேலும் தடுக்க முயன்ற அவரது அம்மா மீனட்சியையும் கத்தியால் குத்தியதாக சொல்லப்படுகிறது.

இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் போலீசார், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தங்க மாரியப்பனை கைது செய்திருக்கின்றனர். கள்ளக்காதலன் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.