“கள்ளக் காதலனுடன் தனிமையில் இருந்த பெண் ” - தாயின் செயலை கண்டு ஆத்திரமடைந்த மகன்… காட்டுப்பகுதியில் கிடந்த வெல்டரின் சடலம்!
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகாவிற்கு உட்பட்ட செக்கடி குப்பம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் 44 வயதுடைய வேலு. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வித்யா என்பவருக்கும் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ள நிலையில் வேலு நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. மீனாவிற்கு திருமணமாகி கணவர் மற்றும் 18 வயது மகன் உள்ள நிலையில் மீனாவின் கணவர் குடித்துவிட்டு எந்த வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மீனா வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்ததாக சொல்லப்படுகிறது. எனவே வேலு அடிக்கடி மீனாவின் வீட்டிற்கு சென்று அங்கு அவருடன் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது.
நாளடைவில் மீனாவின் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்த வேலு மீனாவின் கணவர் ரேணு மற்றும் மகன் மணிகண்டனை தகாத வார்த்தைகளால் பேசி தொடர்ந்து அவமானப்படுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த தனத்தை மற்றும் மகன் வேலுவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன்படி, வேலு நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நாள்தோறும் பணிக்கு சென்று வருவதை நோட்டமிட்டு, அவரை கொலை செய்வதற்கு சரியான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வழக்கம் போல பணியிலிருந்து கிருஷ்ணபுரம் மற்றும் ரெண்டாடி வழியாக தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற வேலுவை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்ற தந்தையான ரேணு மற்றும் மகன் மணிகண்டன், சரியாக கிருஷ்ணாபுரம் வழியாக செல்லும் போது காட்டுப்பகுதி அருகே திடீரென அவரை வழிமறித்து சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனை சற்றும் எதிர்பாராத வேலூ ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் சாலை ஓரமாக ஒருவர் உயிரிழந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சமத்துவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் உயிரிழந்த வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐமன் ஜமால் உத்தரவின் பெயரில் தனிப்படை அமைத்து கொலை குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
வழக்கம்போல நேற்று, பாரதி நகர் மல்லாடி கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக அதிவேகமாக வந்த ரேணு மற்றும் அவரது மகன் மணிகண்டனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு போலீசாரிடமிருந்து தப்பியோட முயற்சித்துள்ளனர். எனவே போலீசார் இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் பிரச்சினையில் இருவரும் சேர்ந்து வேலுவை கொலை செய்தது தெரியவந்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.
.png)
