க்ரைம்

திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த ரவுடி… காட்டுக்குள் தூக்கில் தொங்கியது ஏன்? - மனைவி அளித்த பரபரப்பு புகார்!

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார்...

Mahalakshmi Somasundaram

திருவள்ளூர் மாவட்டம், நகர காவல் எல்லைக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வந்த சரவணனை என்பவருக்கும் திருமணமாகி சுமித்ரா என்ற மனைவி உள்ள நிலையில் இவர் மீது கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட 16 வழக்குகள் திருவள்ளூர் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், மப்பேடு, கடம்பத்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில் சரவணனுக்கு அதே பகுதியை சேர்ந்த தேவி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சுதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் சரவணனுடன் நெருங்கி பழகி வந்திருக்கிறார். இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்து வந்தததாக சொல்லப்படுகிறது.

மேலும் சரவணனை அடிக்கடி தேவி வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம் போல தேவி வீட்டிற்கு சென்ற சரவணன் அங்கு தேவி இல்லாத நிலையில் அவரது இரண்டாவது மகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த தேவி நடந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் மகள்களிடம் சரவணன் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்துள்ளார். இந்நிலையில் வழக்கு பதிவு செய்த அணைத்து மகளிர் காவல் துறையினர் சரவணனை கைது செய்து சிறையில் அடைந்திருக்கின்றனர்.

அந்த வழக்கில் இருந்து ஜாமீனில் வந்த சரவணன் காக்காதலி தேவியிடம் இது குறித்து கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். எனவே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணனை தனது கையில் வைத்திருந்த கத்தியால் தேவியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் காயமடைந்த தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனால் இந்த வழக்கில் கடந்த சில தினங்களாக சரவணன் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கில் கைதாகி விடுவோமோ என பயந்து திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் உள்ள ஏரிக்கரை ஓரத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் சரவணன் மனைவி சுமித்ரா டவுன் போலீசில் கொடுத்த புகாரில், தனது கணவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேவி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாகவும் தேவியுடன் உள்ள இளையராஜா, குமரன் ஆகிய மூன்று பேரும் தனது கணவரிடம் நகை பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் இதனால் மன உளைச்சலில் கணவர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொ*லை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.