திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம், சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதை ஊசி தொடர்பான பிரச்சினையால் ஒரு இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார், இது பொதுமக்களிடையே பயத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை செய்யாறு பகுதியை சேர்த்தவர் ஜெமினி, அமரர் ஊர்தியை ஓட்டும் இவரும், சுனில் என்பவரும் நெருங்கிய நண்பர்கள், போதை மாத்திரைகள், போதை ஊசிகள் போன்றவற்றை ஏரியாவில் சப்ளை செய்வதே சுனிலின் வேலையாக இருந்திருக்கிறது, இதற்கிடையில் சுனிலுக்கு உதவி செய்யும் விதமாக ஜெமினியும், அவரோடு சேர்ந்து போதை ஊசிகளை சப்ளை செய்து உள்ளார் .
இதனை அறிந்த போலீசார் ஜெமினியையும், சுனிலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர், வெளியில் வந்த ஜெமினி தந்தையின் அறிவுரைகளை கேட்டும், அவரின் எதிர்காலத்தை நினைத்தும், இது போன்ற செயல்களில் ஈடுபடப்போவதில்லை என்று, முடிவெடுத்து தொழிலை கவனித்துள்ளார்.
இவற்றை தெரிந்து கொண்ட சுனில், ஜெமினியை பார்த்து "என்னோடு வா நான் உனக்கு நல்ல எதிர்காலம் காட்டுகிறேன்" என அழைத்துள்ளார், அவரோடு செல்ல மறுத்த ஜெமினி அவருடனான பேச்சுவார்த்தைகளையும், நிறுத்தி உள்ளார். எனவே ஆத்திரம் அடைந்த சுனில் ஜெமினியின் அமரர் ஊர்தி வாகனத்திற்கு தீ வைத்து எரித்து உள்ளார் .
இதை குறித்து ஜெமினியும் அவனது தந்தையும்,காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர், மேலும் ஜெமினியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர், இதனை அலட்சியப்படுத்திய போலீசார் "உன் மகன் மட்டும் என்ன யோக்கியான" என கேட்டு புகாரை ஏற்க மறுத்துள்ளார் .
ஒரு நாள் சுனிலை சந்திக்க சென்ற ஜெமினி, மீண்டும் போதை ஊசி பயன்படுத்திய நிலையில், சுனிலிடம் தனது வாகனம் எரித்ததை பற்றி கேட்க, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில் ஏற்கனவே கோபத்தில் இருந்த சுனில், தனது மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஜெமினியை கொலை செய்துள்ளார் .
இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட சோகத்தை தாண்டி, சமூகத்தில் ஆழமாக பதிந்துள்ள ஒரு பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கவும், இளைஞர்களை பாதுகாக்கவும் அரசு மற்றும் சமூகம் இணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, விழிப்புணர்வு மற்றும் கடுமையான நடவடிக்கைகள் அவசியமாகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்