lalitha  
க்ரைம்

10 வகுப்பு மாணவனை கடத்தி சென்று செக்ஸ் டார்ச்சர் கொடுத்த 40 வயது பெண்.. 54 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்த மகிளா நீதிமன்றம்!

ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியிருந்து அவருக்கு...

Mahalakshmi Somasundaram

திருவாரூர் மாவட்டம், எரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதுடைய லலிதா. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் லலிதா அங்குள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயதுடைய 10ம் வகுப்பு படித்து வந்த சிறுவன் கடந்த 2021 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26 ந் தேதி பள்ளிக்கு சென்றுவிட்டு இரவு வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அப்பகுதி முழுவதும் சிறுவனை தேடி அழைந்திருக்கின்றனர்.

எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காத நிலையில் தங்களது மகனை கண்டுபிடித்து தர கோரி எரவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் மேற்படி அங்கன்வாடி ஊழியரான லலிதா சிறுவனிடம் நல்ல முறையில் பேசி பழகி அவரை கடத்திச் சென்று ஊட்டி மற்றும் வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியிருந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் லலிதாவின் செல்போன் சிக்னலை வைத்து லலிதாவை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சிறுவனை மீட்டு பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். அதனை தொடர்ந்து கைது செய்த அங்கன்வாடி ஊழியர் லலிதா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதி விசாரணையை அடுத்து குற்றவாளி லலிதாவிற்கு 5 பிரிவுகளின் கீழ் மொத்தம் 54 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 18 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டார்.

நிலையில் இந்த 54 ஆண்டு கால சிறை தண்டனையும் ஏக காலமாக 20 ஆண்டு காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ 6 லட்சம் நிதி உதவி வழங்கவும் நீதிபதி சரத்ராஜ் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து குற்றவாளி லலிதா போலீசார் மூலம் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.