thiruvarur murder news thiruvarur murder news
க்ரைம்

“கடைவீதியில் நடந்த பயங்கரம்” - திடீரென கட்டான கரண்ட்.. ரவுடியுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அப்பாவி உயிர் பறிபோனது ஏன்?

காளிதாஸ் மற்றும் இளையராஜா தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது..

Mahalakshmi Somasundaram

திருவாரூர் மாவட்டம்,  அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் என்பவற்றின் மகன் 30 வயதுடைய நந்தகுமார். இவர் திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். நந்தகுமாருக்கும் அதேபகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது இருவரும் ஒன்றாக சேர்ந்து டீ குடிப்பது மது அருந்துவது என நெருங்கி பழகி வந்துள்ளனர். மது அருந்துவதற்காக தான் நந்தகுமார் காளிதாஸுடன் பழகியதாக சொல்லப்படுகிறது. 

இதனை அறிந்த நந்தகுமாரின் பெற்றோர்கள் நந்தகுமாருடன் பழக்க வேண்டாம் என கண்டித்துள்ளனர். காளிதாஸ் மீது திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. காசுக்காக வெட்டி கொலை செய்வது மிரட்டுவது போன்ற வேலைகளை காளிதாஸ் பார்த்து வந்துள்ளார். அதே போல இளையராஜா என்பவரும் காசுக்காக கொலை செய்பவர் என சொல்லப்படுகிறது. 

இருவரும் ஒரே மாதிரியான வேலை செய்வதால் காளிதாஸ் மற்றும் இளையராஜா தரப்பினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளையராஜா தரப்பினர் எதிர் தரப்பினரை கொலை செய்ய முடிவு செய்து திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு காளிதாஸ் மற்றும் நந்தகுமார் கடைவீதியில் நின்று டீ குடித்து கொண்டு இருந்துள்ளனர். அப்போது அங்கு அரிவாளுடன் இளையராஜா தரப்பினர் வந்ததை பார்த்த காளிதாஸ் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். ஆனால் ஏதும் புரியாமல் நந்தகுமார் அங்கேயே நின்றிருந்துள்ளார்.

அப்போது சரியாக மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் காளிதாஸ் ஓடியதை கவனிக்காத இளையராஜா தரப்பினர் காளிதாஸ் என நினைத்து நந்தகுமாரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நந்தகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளையராஜா மற்றும் காளிதாஸ் தரப்பினரை தேடி வருகின்றனர். நந்த குமாருக்கும் காளிதாஸ் செய்த குற்றங்களும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் அவர் மீது எந்த வழக்குகளும் இல்லாததும்  குறிப்பிடத்தக்கது. இரவு நேரத்தில் கடைவீதியில் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.