திருவாரூர் மாவட்டம், மருதப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் 23 வயதுடைய பிரவீன் குமார் பிபிஏ படித்து முடித்துவிட்டுட்டு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதேபோல் கும்பகோணம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்தவர் 19 வயதுடைய ஜெயஸ்ரீ. இவர் அங்குள்ள கல்லூரியில் பி.காம் படித்து வருகிறார். இருவரும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி நட்பாக பழகி வந்துள்ளனர். இவர்களது நட்பானது காலப்போக்கில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், படிப்பிற்கு தனது காதல் தடையாக இருக்கிறது என நினைத்த மாணவி காதலை நிறுத்திக் கொள்ளலாம் என கூறியுள்ளார். இதற்கு பிரவீன் மறுப்பு தெரிவித்த நிலையில் இருவருக்கு இடையே வாக்குவாதம் நடைபெற்று வந்திருக்கிறது. பிரவீன் எவ்வளவு எடுத்து கூறியும் ஜெயஸ்ரீ காதலை கைவிடுவதில் உறுதியாக இருந்துள்ளார். எனவே மன உளைச்சல் அடைந்த பிரவீன் தனது காதலியிடம் “எதுவாக இருந்தாலும் நேரில் பேசி முடிவு செய்து கொள்ளலாம்” என கூறி நேரில் அழைத்துள்ளார்.
இதை தொடர்ந்து இருவரும் கும்பகோணத்திலிருந்து பைக்கில் திருக்கண்ணமங்கை பகுதிக்கு சென்று அங்கிருந்த சேட்டா குளம் என்ற குளத்தின் அருகே அமர்ந்து பேசி உள்ளனர். இதில், காதலை முறித்துக் கொள்வதில் ஜெயஸ்ரீ பிடிவாதமாக இருந்துள்ளார். ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த பிரவீன் இதனால் மேலும் ஏமாற்றமடைந்த திடீரென அங்கிருந்த குளத்தில் குதித்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெய ஸ்ரீயும் காதலனை காப்பாற்ற நினைத்து குளத்தில் குதித்து பிரவீனை மீட்க போராடியுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் குளத்தில் குதித்து இருவரையும் மீட்டனர் .
இதில் பிரவீன் குமார் மூச்சு பேச்சு இன்றி இருந்ததன் காரணமாக உடனடியாக சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பிரவீன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ஜெயஸ்ரீ மீட்டு அவரது பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர் . இது குறித்து தகவலறிந்த குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர், காதல் விவகாரத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சி வைரலாகி திருவாரூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.