தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க குமார். இவருக்கும் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த முது செல்வி என்பவருக்கும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு முத்து செல்வி வேறு ஒரு ஆணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படும் நிலையில், இதன் காரணமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு கணவனை பிரிந்து முத்து செல்வி தனது குழந்தைகளுடன் விளாத்திகுளம் அருகே மாமுனியபுரத்தில் தனியாக வசித்து வருகிறார்.
இதற்கிடையில் தனியாக வசித்து வந்த முத்து செல்விக்கும் அதே பகுதியை சேர்ந்த முது முருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருக்கமாக பழகி வந்திருக்கின்றனர். பின்னர் இவர்களது பழக்கமானது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறி 5 வருடங்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. முத்து செல்வியின் மகள் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அரசு பள்ளியில் 8 வகுப்பு படித்து வருகிறார். வழக்கம் போல, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற சிறுமி வகுப்பறையில் மயக்கமடைந்த நிலையில் அவரை மீட்ட ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த போது அவர் கருக்கலைப்பு மாத்திரையை உட்கொண்டதால் இவ்வாறு நடத்தும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து சிறுமியின் தந்தைக்கு தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு சென்ற தங்க குமார், மக்களிடம் விசாரித்த போது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது கள்ளக்காதலன் முத்து முருகன் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டது தெரியவந்தது. எனவே சிறுமியின் தந்தை விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் முத்துமுருகன் மீது புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த நிலையில் இதுவரை குற்றம்சாட்டப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனவே, தனது 13 வயது மகளுக்கு நீதி கிடைக்கவும், புகாரில் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்டுள்ள முத்துமுருகன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தங்ககுமார் விரைவாக முது முருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீருடன் மனு அளித்துள்ளார். தாயின் கள்ளக்காதலன் 8 வகுப்பு சிறுமி கர்ப்பமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.