Admin
க்ரைம்

“லேட்டா வருவியா...” - வேலைக்கு தாமதமாக வந்த நண்பன்.. சரியான நேரத்திற்கு வர சொல்லி எச்சரித்தவரை கொலை செய்த சம்பவம்!

தனியார் சூப்பர் மார்கெட்டில் நண்பர்கள் என்பதால் மாறி மாறி வாட்ச்மேன் வேலை செய்து...

Mahalakshmi Somasundaram

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய அலிஜான். இவர் ஆரம்பத்தில் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மாறி பின்னர் 40 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பெண்ணை காதலித்திருக்கிறார். எனவே அவரை கல்யாணம் செய்து கொள்ள கிறிஸ்தவத்தில் இருந்து முஸ்லிமாக மதம் மாறி நூர் நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் ஒரு பெண்ணுக்கு இந்து மதத்தை சேர்ந்த தருமபுரி பகுதியை சேர்ந்த நபரை திருமணம் செய்து வைத்து உள்ளனர். இன்னொரு பெண் பிள்ளையை சவுதி அரேபியாவில் படிக்க அனுப்பி உள்ளனர்.

அலிஜானுக்கு ஆசிரியர் நகர் பகுதியை சேர்ந்த 65 வயதுடைய கார்த்திகேயன் என்பவர் பல வருடங்களாக குடும்ப நண்பராக இருந்துள்ளார். அலிஜான் கார்த்திகேயனுக்கு ஆரம்பகட்டத்தில் வாட்ச்மேன் வேலை வாங்கி கொடுத்து உள்ளார். இந்நிலையில் இருவரும் திருப்பத்தூர் தினசரி மார்க்கெட் அருகே உள்ள தனியார் சூப்பர் மார்கெட்டில் நண்பர்கள் என்பதால் மாறி மாறி வாட்ச்மேன் வேலை செய்து உள்ளனர். கடந்த சில மாதங்களாக கார்த்திகேயன் நேரத்திற்கு வேலைக்கு செல்லாமல் காலம் கடந்து வேலைக்கு சென்றுள்ளார். இதனை அலிஜான் அவ்வப்போது எச்சரித்து உள்ளார்.

இந்நிலையில் கார்த்திகேயன் லேட்டாக வருவதால் அலிஜான் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி அவரிடம் வேலைக்கு சரியான நேரத்திற்கு வருமாறு வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை காலை 7 மணிக்கு கார்த்திகேயன் டூட்டி மாற்ற வர வேண்டும். ஆனால் 8.30 மணி ஆகியும் அவர் டூட்டி மாற்ற செல்லாமல் ஆடி அசைந்து 8.35 மணிக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அலிஜான் “லேட்டா வருவியா லேட்டா வருவியா” என கேட்டு அருகில் இருந்த பிரம்பை எடுத்து சரமாரியாக தாக்கி உள்ளார். அடியை வாங்கி கொண்டு வலியை பொறுக்க முடியாத கார்த்திகேயன் அந்தோணியை கீழே தள்ளி அடித்து அருகில் இருந்த கான்கிரீட் (ஸ்லாப்பை) எடுத்து தலையில் போட்டு உள்ளார்.

இதனால் தலையில் 3 இடங்களில் கிழித்து கொண்டு ரத்த வெள்ளத்தில் அலிஜான் சரிந்து விழுந்தது உள்ளார். அவரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து கட்டிடத்தில் வேலை செய்து கொண்டு இருந்த செக்யூரிட்டி சென்று பார்த்துள்ளார். பின்னர் ரத்தவெள்ளத்தில் மிதந்த அலிஜானை மீட்டு அக்கபக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு போன் செய்து சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறியுள்ளனர்.

தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியா மற்றும் நகர போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி தப்பி ஓடிய கார்த்திகேயனை தேடி வந்தனர். பின்னர் உறவினர் ஒருவரின் வீட்டில் பதுங்கி இருந்த கார்த்திகேயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் என்னை வேலைக்கு ஏன் தாமதமாக வருகிறாய் என்று கேட்டு அடித்தார் வலி தாங்க முடியாமல் ஆத்திரத்தில் தள்ளிவிட்டு கான்கிரீட் சிலாப்பை போட்டு விட்டு தப்பி ஓடி விட்டேன் என்று கூறி உள்ளார். பின்னர் கார்த்திகேயனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.