க்ரைம்

“ஒன்னு பஸ் ஏறுமா.. இல்ல இறங்கி போய்டுமா..” - தொடர்ந்து வம்பிழுத்த பயணி.. பாதி வழியில் வந்த மர்ம கும்பலுடன் பெண் செய்த அடாவடி!

தனியார் பேருந்தை ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் வழிமறித்து..

Mahalakshmi Somasundaram

திருச்சி மாவட்டம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் எம் எம் எம் என்ற தனியார் பேருந்தில், நேற்று இரவு 9 மணியளவில் ஓட்டுநர் கணேசன் பயணிகளை கேன்வாஸ் செய்து ஏற்றிக்கொண்டிருந்தார். அப்போது கரூர் செல்வதற்கான பயணிகள் குறைவாக இருந்ததால், பேருந்து இருக்கைகளை நிரப்புவதற்காக ஜீயபுரம் செல்லும் பெண்மணி ஒருவரை இருக்கையில் அமரச்சொல்லி டிரைவர் கணேசன் கூறியுள்ளார்.

அதே சமயம் இப்பேருந்திற்கு அருகில், கரூர் செல்லும் மற்றொரு தனியார் பேருந்து நின்று கொண்டிருந்த போது, எம் எம் எம் பேருந்தை விட மற்றொரு பேருந்து முன்னே செல்லும் என சொல்ல படுகிறது. இதனால் முன்னே செல்லும் பேருந்தில் செல்ல நினைத்த அந்த பெண்மணி பேருந்தில் ஏறுவதும் இறங்குவதுமாக இரண்டு பெருந்திலுக்கே அமராமல் மாறி மாறி ஏறி இரங்கி கொண்டு இருந்துள்ளார் இந்நிலையில், கோபமடைந்த எம் எம் எம் பேருந்து ஓட்டுநர் கணேசன் “ஒன்று பேருந்தில் ஏறும்மா... இல்லாவிட்டால் இறங்கி போய்டுமா..” என கூறியுள்ளார்.

இதனால் ஓட்டுநருக்கு அந்த பெண்மணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது அப்போது, அந்தப் பெண்மணி தனது தொலைபேசியில் யாருக்கோ போன் செய்து ஓட்டுனர் குறித்து தெரிவித்துள்ளார். பின்னர் நேரம் ஆகவே ஓட்டுநர் பேருந்தை இயக்க தொடங்கியுள்ளார். இதனை அடுத்து ஜியபுரம் சென்ற தனியார் பேருந்தை ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் வழிமறித்து, உருட்டு கட்டைகள் மற்றும் கைகளால் டிரைவரை கீழே இழுத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த டிரைவர் கணேசன் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவரை தாக்கிய ரவுடி கும்பலை தேடி வருகின்றனர். ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டதால் மற்றொரு ஓட்டுநரை பேருந்து நிர்வாகம் தயார் செய்யும் வரை எம் எம் எம் பேருந்தில் பயணித்த பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.