திருச்சி மாவட்டம், முசிறி அருகே வடுகபட்டி பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது, இக்கல்லூரியில் சிதம்பரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய தமிழ் பேராசிரியர் நாகராஜன் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக முசிறி அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். மூன்று வருடங்களுக்கு மேலாக இக்கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியர் நாகராஜன் பணிபுரிந்து வந்தார்.
கல்லுரியில் பாடம் நடத்தும் போதும் தேர்வுகளின் போதும் தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். தங்களின் படிப்பு கேட்டு விடக்கூடாது என மாணவிகள் இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடமோ, வீட்டில் பெற்றோர்களிடமோ தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த மாணவிகளிடம் பேராசிரியர் நாகராஜ் இது போல நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தனக்கும் தனது மனைவிக்கும் சண்டை என கூறி மாணவிகளிடம் நெருங்கி பழகி வந்துள்ளார்.
மேலும் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிக்கு அவ்வப்போது போன் செய்து பாடம் குறித்து பேசுவதாக சொல்லி தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை அந்த மாணவி சக நண்பர்களிடம் கூறிய போது, மாணவியின் நண்பர்கள் பேராசிரியரை கையும் களவுமாக பிடிக்க ஆதாரம் சேகரிக்க எண்ணி 17 வயது மாணவியை நாகராஜனிடம் எதிர்ப்பு தெரிவிக்காதது போல பேச கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து நாகராஜ் மாணவிக்கு போன் செய்து “என்ன உனக்கு பிடிக்கும் இல்ல அப்போ என் கூட இருப்பியா இருக்கமாட்டிய எனக்கும் என் மனைவிக்கும் சண்டை அவ என் தேவைகளை பூர்த்தி செய்யறது இல்ல
நீ சொல்லு நான் என்ன கேட்டாலும் குடுப்பியா நீ தான் எனக்கு வேணும், மொத்தமா உன்ன எனக்கு கொடுப்பியா, இதுக்கு சம்மதம்னா முன்னாடி ஒரு நாள் போட்ட அந்த வெள்ளை டிரஸ் போட்டுட்டு தலையில பூ வச்சுட்டு வா” என கூறி தனிமையில் இருக்க அழைத்துள்ளார். இதனை ரெகார்ட் செய்த மாணவர்கள் இது குறித்து தலைமை ஆசிரியரிடம் புகாரளித்துள்ளனர். இந்த ஆடியோ வைரலாகி உள்ள நிலையில் முசிறி அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் சார்பாக கல்லூரியில் பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டது.
விசாரணையில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவிகள் உட்பட பல்வேறு மாணவிகளிடம் ஆசிரியர் தவறாக நடந்து கொண்டது தெரிய வந்த நிலையில் பேராசிரியர் நாகராஜன் மீது அளித்த புகாரின் பேரில் மண்டல இணை இயக்குனர் உத்தரவின் பேரில் பேராசிரியர் நாகராஜனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பேராசிரியரை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கல்லூரி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து முசிறி கல்லூரி பகுதிகளில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.