க்ரைம்

“செலவுக்கு பணம் கொடுக்க மறுத்த மனைவி கொலை” - தொடர்ந்து திட்டியதால் ஆத்திரம் அடைந்த கணவன்.. காட்டுக்குள் நடந்த பயங்கரம்!

தனது மனைவியிடம் பணம் வாங்கித்தான் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது...

Mahalakshmi Somasundaram

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வெள்ளகோவில் அருகே கணபதிபாளையம் அப்பையன் பகுதியை சேர்ந்தவர் 77 வயதுடைய பெரிய சாமி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 65 வயதுடைய புஷ்பாத்தாள் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகனான பரமசிவன் என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டவர் என சொல்லப்படும் நிலையில் திருமணமாகாமல் பெற்றோருடன் வசித்து வருகிறார்.

இரண்டாவது மகனான முருகேசன் என்பவருக்கு அவரது உறவுக்கார பெண்ணுடன் திருமணமான நிலையில் அவரது தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். கூலி வேலை செய்து வந்த பெரிய சாமி வயது மூப்பு காரணமாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இன் காரணமாக கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கோழி,ஆடுகளை வளர்த்து விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வருகின்றனர்.

ஆடு, மாடு, கோழிகளை விற்பனை செய்யும் பணத்தை மனைவி புஷ்பாத்தாள் கணவருக்கு கொடுக்காமல் தன்னிடமே வைத்துக் கொள்வர் என சொல்லப்படுகிறது. எனவே பெரியசாமி தனக்கு ஏதாவது வேண்டும் என்றால் கூட தனது மனைவியிடம் பணம் வாங்கித்தான் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பெரியசாமி பணத்தை கேட்டுக்கும் போது அவரது மனைவி கொடுக்க மறுத்து அவரை தொடர்ந்து திட்டி வந்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. அதே போல் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாங்குவதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணவர் பெரியசாமி கட்டையால் மனைவி புஷ்பாத்தாலை சரமாரியாக அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து வெள்ளகோவில் காவல் துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கணவன் பெரியசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.