தூத்துக்குடி சிப்காட் காவல் துறையினர் தாக்கியதில் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட கூலித் தொழிலாளி ஆனந்த சைரஸ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருக்கின்றனர்.
தூத்துக்குடி ராஜகோபால் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த சைரஸ் கூலி தொழிலாளி இவருக்கும் இவரது காம்பவுண்டிலே வீட்டு அருகே வசித்து வந்த கருப்பசாமி என்பவருக்கும் இடையே வாய் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு ஆனந்த சைரஸ் மது போதையில் இருந்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது, இதைத்தொடர்ந்து கருப்பசாமி ஆனந்த சைரஸ் மீது சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வந்த சிப்காட் காவல் நிலையத்தை சேர்ந்த 3 காவல்துறையினர் கூலித் தொழிலாளி ஆனந்த சைரசை அவரது வாயில் அடித்ததுடன் கம்பால் தாக்கி நீ” என்ன பெரிய ரவுடியா உன்னை மட்டுமல்ல உன் குடும்பத்தையும் உள்ளே அடைத்து விடுவோம்” என மிரட்டி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து காவல் துறையினருடன் ஆனந்த சைரசின் மனைவி சரோபினா சார் எனது கணவர் என்ன தவறு செய்துவிட்டார் என்று இப்படி அவரை அடித்து உள்ளீர்கள்? மேலும் குடும்பத்தோடு உள்ளே வைப்பேன் என எதற்காக மிரட்டுகிறீர்கள்? என கேட்டுள்ளார்.
இந்நிலையில் காம்பவுண்டில் உள்ள நபர்கள் மத்தியில் வைத்து காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்த ஆனந்த சைரஸ் உடனடியாக வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து வெளியே வந்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடலில் பலத்த தீக்காயம் அடைந்த ஆனந்த சைரஸ் அந்த பகுதியில் அலறியபடி அப்படியே கீழே விழுந்துள்ளார் இதில் அவர் உடல் முழுவதும் கருகிவிட்டது. இதனால் பதட்டம் அடைந்த காவல்துறையினர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முற்பட்டுள்ளனர் மேலும் உடனடியாக 108 ஆம்புலன்சை அழைத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமன கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் 90 சதவீதம் உடல் கருகிய நிலையில் கூலி தொழிலாளி ஆனந்த சைரஸ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்