கோவையில் அடுத்தடுத்து காலூன்றி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு தனியார் கல்லூரி மாணவி அனுப்பிரியா என்ற மாணவி, கல்லூரியில் நடத்திய விசாரணைக்கு பிறகு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீண்டும் கோவையில் அதே போல் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த தமிழரசு என்ற மாணவர் கோவையில் உள்ள கற்பகம் மருத்துவக் கல்லூரியில் B.pharm இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று, தனது விடுதி அனுமதி அடையாள அட்டையை வைத்து ஜூனியர் மாணவர்கள் இரண்டு பேரை விடுதியில் இருந்து வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. விடுதி நிர்வாகத்திற்கு, இது குறித்து தகவல் தெரிய வரவே மாணவனை அழைத்து கண்டித்ததுடன் மன்னிப்பு கடிதம் எழுதி தருமாறு கூறியுள்ளனர்.
இதனால், இன்று பிற்பகல் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தி வந்த நிலையில் மாணவர் விடுதி அருகில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும் தகவல் அறிந்து, அங்கு சென்றுள்ள செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார், அதே கல்லூரியில் படிக்கும் சக மாணவர்கள் மற்றும் கல்லூரி விடுதி நிர்வாகிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்