க்ரைம்

“பெண் குளிப்பதை எட்டி பார்த்த தவெக நிர்வாகி” - கழிப்பறை ஜன்னல் வழியாக அத்துமீறிய சம்பவம்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!

தொடர் விசாரணையில் இளம்பெண் குளிப்பதை கழிவறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததை ஒப்புக்கொண்டார்.

Mahalakshmi Somasundaram

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்து அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். தினமும் காலை கல்லூரிக்கு செல்வதனால் 7 மணியளவில் குளித்துவிட்டு தயாராவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதே போல நேற்று இளம்பெண் கல்லூரி செய்வதற்காக குளித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த த.வெ.க கட்சியின் நிர்வாகியான 32 வயதுடைய தியாகு என்பவர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளார். இதனை கவனித்து அதிர்ச்சியடைந்த இளம் சதிமிட்டாமல் வெளியில் வந்து பெற்றோர்களின் உதவியுடன் காவல் நிலையம் சென்றிருக்கிறார்.

தொடர்ந்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் தவெக நிர்வாகி தியாகு மீது காவல் நிலையத்தில் குளிப்பதை அத்துமீறி எட்டி பார்த்ததாகவும், அதனை வீடியோ எடுத்திருப்பாரோ என்ற சந்தேகமும் உள்ளது என புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் மணிமங்கலம் பகுதியில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த த.வெ.க நிர்வாகி தியாகுவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். முதலில் அவ்வாறு செய்யவில்லை என மழுப்பிய தியாகு போலீசாரின் தொடர் விசாரணையில் இளம்பெண் குளிப்பதை கழிவறை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் செல்போனில் வீடியோ எடுத்ததாக இளம் பெண் சந்தேகித்த நிலையில் மணிமங்கலம் காவல்துறையினர் அவருடைய செல்போனை பறிமுதல் செய்து வீடியோ எடுக்கப்பட்டு டெலிட் செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்வதற்காக ரெக்கவரி பிரிவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இது தான் முதல் முறையை அல்லது இதுபோல தொடர்ந்து தியாகு பெண்களிடம் அத்துமீறி வருகிறார் என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குற்றம் செய்ததை தியாகு ஒப்புக்கொண்டது மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து த.வக நிர்வாகி தியாகுவை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி இளம்பெண் குளிப்பதை எட்டிப் பார்த்து செல்போனில் வீடியோ பதிவு செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் தவெகவினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.