க்ரைம்

சிங்கபூரில் இருந்து வந்த கணவன்.. கள்ளக்காதலானோடு கதவை பூட்டிய மனைவி! போலீசில் சிக்கிய தவெக நிர்வாகி?

வெளிநாட்டில் சாம்பாதித்து கொடுக்கும் பணத்தில் கள்ளக்காதலன் முக்கேஷுடன் உல்லாசமாக சென்னையில் சுற்றி திரிந்து வந்துள்ளார்

Muthu Lakshmi

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (47). ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சித்திரை செல்வி (43). இருவருக்கும் கடந்த 2013 ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வந்துள்ளனர். மகேந்திரன் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

மனைவி சித்திரை செல்வி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சென்னை புறநகர் மாவட்ட துணைச் செயலாளராகப் பொறுப்பு வகித்து  வருகிறார். இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பள்ளிக்கரணை தவெக பகுதி செயலாளர் முகேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கம் ஒரு கட்டத்திற்கு மேல் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. கணவர் மகேந்திரன் வெளிநாட்டில் சாம்பாதித்து கொடுக்கும் பணத்தில் கள்ளக்காதலன் முக்கேஷுடன் உல்லாசமாக சென்னையில் சுற்றி திரிந்து வந்துள்ளார் சித்திரை செல்வி. இது குறித்து கணவர் மகேந்திரனுக்கு தெரியவந்துள்ளது. அதனையடுத்து கடந்த 2025 ஏப்ரல் மாதம் பள்ளிக்கரணை காவல் நிலையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் CSR மட்டுமே பதிவு செய்தனர். இது சம்மந்தமாக மகேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மகேந்திரன் சிங்கப்பூரில் இருந்து சென்னை பள்ளிக்கரணை வீட்டிற்கு காலையில் சென்றதும் வீட்டினுள் மனைவி சித்திரை செல்வியுடன் தவெக பகுதி செயலாளர் முகேஷ் இருந்த நிலையில் கணவன் மகேந்திரனை பார்த்ததும் கதவை உள்ளே பூட்டிக்கொண்டாதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த கணவன் மகேந்திரன் வீட்டின் கதவை வெளியே பூட்டிக்கொண்டு, 100 க்கு கால் செய்து போலீசாரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து முகேஷை போலீசில் பிடித்து கொடுத்துள்ளார். பின்னர் போலீசார் தவெக நிர்வாகி முகேஷை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கணவர் மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்; நான் சிங்கப்பூரில் சாம்பாதித்து வாங்கிய அனைத்தையும் மனைவி சித்திரை செல்வியிடம் இருந்து பெற்று தர வேண்டும். தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பில் உள்ளவர் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால் பள்ளிக்கரணை போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள் என்று குற்றசாட்டை முன்வைத்துள்ளார். தான் சாம்பாதித்து கொடுத்த 250 சவரன் தங்க நகை, வீடு, ஆஸ்டல், சலூன் உள்ளிட்டவைகளை மீட்டு தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்