மனிதர்களின் வக்கிர மனநிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நெஞ்சை உலுக்கும் விதமாக தினம் தினம் அரங்கேறி வருகின்றன.
எடப்பாடி பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகன ஓட்டிகள் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கொருவர் அரிவாளால் வெட்டிக்கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட தாவாந்தெரு பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் நந்தகுமார் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் அப்போது, ஆலச்சம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தனியார் பைனான்ஸ் கலெக்சன் ஏஜண்டாக மாணிக்கம் என்பவரின் இருசக்கர வாகனத்தில் எடப்பாடி பேருந்து நிலையம் அருகே லேசாக மோதியதில் முதலில் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது .
பின்னர் இந்த சண்டை கைகலப்பாக மாறியதை தொடர்ந்து நந்த குமார் கையில் வைத்திருந்த அரிவாளால் மாணிக்கத்தை தாக்கியதாகவும் பின்னர் அதே அரிவாளை பிடுங்கிய மாணிக்கம் நந்தகுமாரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. படுகாயமடைந்த இருவரும் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையிலும் கோஷ்டி மோதல் ஏற்படும் சூழல் காணப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி போலீசார் இருவரையும் சமாதானம் செய்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றினர்.
தொடர்ந்து மாணிக்கம் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருவரின் மோதல் குறித்து எடப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.