க்ரைம்

மீண்டும் இரண்டு சிறுமிகள் மாயம்.. நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! காப்பகத்தில் இருந்து காணாமல் போனது எப்படி?

"சிறுமிகளை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இருவரையும் கண்டுபிடித்து தருமாறு..."

Muthu Lakshmi

சென்னை, புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறப்பு பெண் குழந்தைகளுக்கான இலவச காப்பகம் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இந்த காப்பாக்கத்தில் மூளை வளர்ச்சி குன்றிய சிறப்பு பெண் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகள் என குழந்தைகள் நலக்குழு மூலம் ஒப்படைக்கப்பட்ட 36 குழந்தைகள் பராமரிப்பில் உள்ளனர். 

இதில் விழுப்புரத்தை சேர்ந்த அகல்யா (15), சென்னையை சேர்ந்த திவ்யா (14) ஆகிய 2 சிறுமிகள் கடந்த 21 அன்று இரவில் காப்பகத்தின் முதல் மாடிக்கு சென்று அங்குள்ள மரத்தின் கிளைகள் வழியாக கீழே இறங்கி தப்பித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காப்பக நிர்வாகி சைலஜா பாஸ்கர் சிறுமிகளை அப்பகுதி முழுவதும் அலைந்து தேடியுள்ளார். சிறுமிகளை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் இருவரையும் கண்டுபிடித்து தருமாறு காப்பகத்தின் நிர்வாகி புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட புழல் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வசந்த் ராஜா இது குறித்து வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய 2 சிறுமிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு புழல் சிறையில் கைதிகள் காணாமல் போன சம்பவத்தில் கைதிகள் இருவர் போலீசாரால் பிடிபட்ட நிலையில் தற்போது அதே பகுதியில் இரண்டு சிறுமிகள் மாயமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.