veda saloon  Admin
க்ரைம்

“சலூன் என்ற பெயரில் நடந்த பாலியல் தொழில்” - நீலாங்கரையில் வைத்து மீட்கப்பட்ட 9 பெண்கள்… நடவடிக்கை எடுக்காத ஆய்வாளர் கொடி ராஜ்!

மகளிர் போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் மாசஜ் சென்டரில் திடீரென சோதனை நடத்திய போது...

Mahalakshmi Somasundaram

சென்னை கிழக்கு கடற்கரை சாலை​ நீலாங்கரை காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வருவதாக கூறி அப்பகுதி மக்கள் நீலாங்கரை காவல் ஆய்வாளர் கொடி ராஜ் என்பவருக்கு தகவல் தகவல் தெரிவித்துள்ளனர். பாலியல் தொழில் நடப்பது குறித்து நீலாங்கரை ஆய்வாளர் கொடிராஜிடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. எனவே அப்பகுதி மக்கள் இது குறித்து அடையார் துணை ஆணையர் கார்த்திகேயனிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த அடையார் மாவட்ட காவல் துணை ஆணையரின் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ​சென்னை ஈசிஆர் நீலாங்கரை கஜீரா கார்டன் முதல் தெருவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் ஆனந்த் மற்றும் அவரது கூட்டாளி சித்ரா ஆகியோர் இணைந்து 'வேதா வெல்நெஸ் சென்டர் சலூன் & ஸ்பா' என்ற பெயரில் பெண்களை வைத்து ரகசியமாக பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது.

ecr police station

உதவி ஆய்வாளர் ஜெயபாலாஜி தலைமையிலான 6 பேர் கொண்ட மகளிர் போலீசார் உள்ளிட்ட தனிப்படையினர் மாசஜ் சென்டரில் திடீரென சோதனை நடத்திய போது சலூன் மற்றும் ஸ்பா என்ற போர்வைக்குள் பாலியல் தொழில் அரங்கேறி வந்தது உறுதி செய்யப்பட்டது. பின்னர் மசாஜ் சென்டரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த 9 பெண்களை தனிப்படை போலீசார் மீட்டனர். தொடர்ந்து மசாஜ் சென்டரில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த மசாஜ் சென்டர் பெண் மேலாளர் தமிழரசியை தனிப்படையினர் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள ஸ்பா உரிமையாளர் ஆனந்த் மற்றும் சித்ரா ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ​நீலாங்கரை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அரங்கேறி வரும் தொடர் குற்றச்சம்பவங்களை அடையார் துணை ஆணையர் தனிப்படை போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அனைத்து சட்டவிரோத செயல்களையும் நீலாங்கரை காவல் ஆய்வாளர் கண்டும் காணாமல் இருப்பது ஆய்வாளர் மீது பல்வேறு சந்தேகங்களை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.