க்ரைம்

ச்சீ.. 2000 ரூபாய்க்கு இப்படியா?  வாடகைகாக மனைவி மற்றும் மகளை சீரழிக்க.. வீட்டு ஓனர்-க்கு பிளான் போட்டு கொடுத்த தந்தை!

வீட்டு உரிமையாளர் பலமுறை அந்த பெண்ணையும் சிறுமியையும்

Muthu Lakshmi

குஜராத்தின் மோர்பியில் மனதை உலுக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. வாடகை பணத்தை செலுத்த முடியாத நிலையில், தனது மனைவியையும் 13 வயது மகளையும் வீட்டு உரிமையாளரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த அனுமதித்ததாகக் கூறப்படும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 55 வயதான வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்புடைய மற்றொரு நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

காவல்துறையின் தகவல்படி, குஜராத்தின் சுரேந்திரநகர் பகுதியைச் சேர்ந்த அந்தக் குடும்பம், வாழ்வாதாரத்தைத் தேடி சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு மோர்பிக்கு குடிபெயர்ந்துள்ளது. அங்கு மாதம் ரூ.2,000 வாடகையில் ஒரு வீட்டில் தங்கி வந்துள்ளனர். ஆனால் கடுமையான நிதி நெருக்கடியால் தொடர்ந்து நான்கு மாதங்களாக வாடகை செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்ட 55 வயதான வீட்டு உரிமையாளர், செலுத்தப்படாத வாடகைக்கு ஈடாக அதிர்ச்சிகரமான நிபந்தனையை முன்வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி, தனது மனைவியையும் 13 வயது 7 மாதங்கள் நிரம்பிய மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்த அனுமதிக்கும் வகையில் அந்தத் தந்தை ஒப்பந்தம் செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, வீட்டு உரிமையாளர் பலமுறை அந்த பெண்ணையும் சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும், வீட்டு உரிமையாளரின் உறவினரும் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் வீட்டு உரிமையாளரின் வீட்டிலும், வாடகை வீட்டிலும், டங்காரா பகுதியில் உள்ள இடங்களிலும் நடைபெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் பாட்டி இந்த கொடூர சம்பவம் குறித்து அறிந்ததும் உடனடியாக மோர்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ (POCSO) சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

“அந்தச் சிறுமியின் தந்தையும் வீட்டு உரிமையாளரும் இணைந்து இந்த பாலியல் துஷ்பிரயோகத்தை திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளனர்,” என்று காவல் துணை கண்காணிப்பாளர் ஜே.எம். லால் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான மருத்துவப் பரிசோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மூன்றாவது நபரை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குஜராத்து மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்தின் பாதுகாப்பிற்காக இருக்க வேண்டிய தந்தையே தனது மனைவி மற்றும் சிறுமியை இவ்வாறு கொடூர சூழ்நிலைக்குள் தள்ளியிருப்பது மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சம்பவமாக பார்க்கப்படுகிறது. “2000 வாடகை கட்ட முடியல..’’- மனைவி மற்றும் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வீடு ஓனரை அனுமதித்த தந்தை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.