சுஷில் பிரஜாபதி சுஷில் பிரஜாபதி
க்ரைம்

"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஜாமீன் - மாலை அணிவித்து மரியாதை!" இணையத்தில் விவாதத்தைக் கிளப்பிய 'வைரல் வீடியோ'

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிக்கு மலை அணிவித்து மரியாதை.

Vinvizhi Leninton

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிக்கு மலை அணிவித்து மரியாதையை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத்தில், LLB மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சுஷில் பிரஜாபதி, ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர் அவருக்கு மாலை அணிவித்து பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறையிலிருந்து அவர் விடுதலையானதும், மக்கள் அவரைத் தங்கள் தோள்களில் தூக்கிச் சுமந்து, பூ மாலை அணிவித்து ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவரை வரவேற்க வந்தவர்கள், வாகனங்களின் அணிவகுப்பில் அவரைச் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. அறிக்கைகளின்படி, ஆகஸ்ட் 7, 2025 அன்று, காசியாபாத்தில் உள்ள முராத்நகர் காவல் நிலையத்தில், இந்து அமைப்பின் முன்னாள் அதிகாரியான சுஷில் பிரஜாபதி மீது இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், சுஷில் தனது கருப்பு நிற தார் காரில் தன்னை அழைத்துச் சென்று, போதையேற்றும் வகையில் குளிர்பானம் கொடுத்து, பின்னர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்பெண் குற்றம் சாட்டினார்.

சிறையிலிருந்து சுஷில் விடுதலையானதும் ஆதரவாளர்கள் அவரை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர். சுஷில் பிரஜாபதி மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட அவர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அன்று முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார். இதனையடுத்து மே 17ம் தேதி சுஷில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டபோது, ​​அவரை வரவேற்பதற்காக அவரது ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் பெருமளவில் சிறை வாசலில் காத்திருந்தனர். குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாலை அணிவிக்கப்பட்டு, தோள்களில் தூக்கிச் செல்லப்பட்டார்.

சுஷில் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்று மாலை அணிவித்து, ஆதரவாளர்கள் அவரைத் தங்கள் தோள்களில் தூக்கிச் சுற்றத் தொடங்கினர். சுஷில் பிரஜாபதி காசியாபாத்தில் அவர் கடந்த காலத்தில் ஒரு இந்து அமைப்புடன் தொடர்புடையவராக இருந்துள்ளார். சுஷில் பிரஜாபிதா சிறையிலிருந்து வெளியே வரும் இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி, பல கேள்விகளை மக்களிடையே எழுப்பியுள்ளது. இது தொடர்பாக, கிராமப்புற துணை ஆணையர் சுரேந்திர நாத் திவாரி, வைரலான இந்தக் காணொளியை காவல்துறை கவனத்தில் கொண்டு, இதுகுறித்த முழு விவகாரத்தையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.