உத்தரபிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டம் ஆக்ரா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ஆசிரியரிடம் நன்றாக பேசி பழகி வந்திருக்கிறார். இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்ட ஆசிரியை மற்ற மாணவர்கள் போல இந்த மாணவனிடமும் பேசி வந்த நிலையில் நாளடைவில் மாணவனின் செயல்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவன் ஆசிரியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை மாணவனுக்கு அறிவுரை கூறி புரிய வைக்க முயற்சித்துள்ளார். ஆனால் ஆசிரியையின் அறிவுரையை கேட்க தயாராக இல்லாத அந்த மாணவன் தொடர்ந்து ஆசிரியை காதலிப்பதாக தெரிவித்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை இதுகுறித்து மாணவனின் பெற்றோரரை நேரில் சந்தித்து மாணவன் செய்த செயல்களை கூறி கண்டிக்க வலியுறுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து மாணவனின் தாய் இனி அவ்வாறு நடக்காது என உறுதி அளித்து மாணவனை கண்டித்திருக்கிறார்.
இருப்பினும் திருந்தாத அந்த மாணவன் ஆசிரியையிடம் முன்பைவிட மிக மோசமாக நடந்து கொண்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படும் நிலையில் மனமுடைந்த ஆசிரியை வேலையை விட்டு சென்றிருக்கிறார். பின்னர் அதே பகுதியில் உள்ள வேறு ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்திருக்கிறார். மேலும் அதே பகுதியில் டியூஷன் எடுத்து வந்ததாகவும் தெரிகிறது இதனை அறிந்த அந்த மாணவன் அங்கும் சென்று ஆசிரியைக்கு தொல்லை கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டியூசன் எடுத்து விட்டு தனியாக நடந்து சென்றிருந்த ஆசிரியரை பின்தொடர்ந்த மாணவன் வலுக்கட்டாயமாக அவரை தனியாக அழைத்து சென்று அவரது உதடுகளை கடித்து, கூரிய ஆயுதங்களால் அவரது கழுத்தில் காயத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் அவர் தீவிர சிகிச்சைக்காகக் ஆக்ராவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர். மாணவன் ஆசிரியை பின் தொடர்ந்து அவரை காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.