உத்தரப்பிரதேச மாநிலம், நிதாரி பகுதியில் உள்ள பங்களாவில் வசித்து வந்த மொகிந்தர் சிங் மற்றும் அவரது வீட்டில் வேலை செய்து வந்த சுரேந்தர் ஆகிய இருவரும் சேர்ந்து கடந்த 19 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு அருகில் உள்ள நொய்டா என்ற பகுதியில் வசித்து வந்த ஏழ்மையான குடும்பங்களை சேர்ந்த சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி வந்து பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை கொன்று சில உடல்களை தனித்தனியாக வெட்டி பங்களாவை சுற்றியுள்ள கால்வாய்களில் வீசியுள்ளனர். மேலும் சில உடல்களை குழி தோண்டி புதைத்து வைத்திருந்தனர்.
பின்னர் கால்வாயில் இருந்த மண்டையோட்டை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் காவல் துறையினருக்கு பின் செய்து இது குறித்து தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கால்வாயை சோதனை செய்தபோது அதில் பல பெண்களின் எலும்புக்கூடுகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து பங்களாவின் உரிமையாளர் மொகிந்தர் சிங்கை கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மொகிந்தர் சிங்கும் அவரது வேலைக்காரரான சுரேந்தரும் சேர்ந்து நொய்டா பகுதியில் மிகுந்த வறுமையில் வாடும் குடும்பங்களில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை கடத்தி அவர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று புதைத்து தெரியவந்தது. மேலும் சுரேந்தர் 16 வயதுடைய பெண்களை கொன்று அவர்களது சடலத்துடன் உடலுறவு வைத்துக் கொண்டு பின்னர் அந்த பெண்களின் உறுப்புகளை அறுத்து சாப்பிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் படி பங்களாவை சுற்றியுள்ள பகுதிகளில் தோண்டி கொலை செய்யப்பட்ட பெண்களின் உடலை கைப்பற்றிய போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கில் மொகிந்தர் சிங் தவறு செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து மீண்டும் இன்று விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் சுரேந்தரும் குற்றவாளி என்பதற்கு போதுமான அடையாளங்கள் இல்லை என தீர்ப்பளித்தது தொடர்ந்து அவரும் விரைவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் இரண்டு குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்பித்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.